கொழும்பு: இலங்கை உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் ராஜபக்சே கட்சி வெற்றி பெற்ற போதிலும், தலைநகர் கொழும்பு நகரசபை தேர்தலில் தோல்வியை தழுவியது.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் உள்ளாட்சி தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நேற்று இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், அதிபர் ராஜபக்சேயின் கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
23 இடங்களில் 21-ஐ ராஜபக்சே கட்சிக் கூட்டணி பிடித்தது. எதிர்க்கட்சி ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு நகரசபையை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், கண்டி நகர சபையை இழந்தது. 60 ஆண்டு கால உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் இங்கு இந்தக் கட்சி முதன்முறையாகத் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராசபட்ச கட்சிக் கூட்டணியில் உள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை நகர சபையில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் வடக்கு கொழும்பு அருகே கோதிகாவத்தா என்ற இடத்தில் வன்முறை வெடித்தது. எதிர்க்கட்சியினர் துப்பாக்கியால் சுட்டதில் அதிபர் ராஜபக்சவின் ஆலோசகர் பாரத லட்சுமண் பிரேமசந்திரா, அவரது மெய்காப்பாளர் பிரேமசந்திரா, கட்சி தொண்டர்கள் இருவர் உயிர் இழந்தனர்.
No comments:
Post a Comment