மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு நடிகர் செந்தில் கண்டனம் தெரிவித்தார். நடிகர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மார்க்சிஸ்டு இல்லை என்றால் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது என்று அவர் பேசி இருப்பது இமாலய காமெடி.
ஜி.ராம கிருஷ்ணன் எங்களையெல்லாம் மிஞ்சிய காமெடி நடிகராகி விட்டார். கேரளாவில் கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு சரிந்து விட்டது. அங்கு அந்த கட்சி ஆட்சியில் இல்லை. வேறு மாநிலங்களிலும் செல்வாக்கு போய் விட்டது. அதை ஒரு சவலைப் பிள்ளையாகவே இதர கட்சிகள் பார்க்கின்றனர். அக்கட்சியை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டுதான் செல்ல வேண்டும். தன்னால் நடக்க இயலாது.
கடந்த தேர்தலில் புரட்சித் தலைவி அம்மாபோட்ட பிச்சையால் சட்டமன்றத்துக்கு வந்தார்கள். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு மரண அடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment