Friday, June 14, 2013

கோடி சூர்யனில் ஒரு சூர்யன்

"கோடி சூர்யனில் ஒரு சூர்யன் அஸ்தமித்தான்; எரிதழல் கோளமாய் வானின்றிறங்கி மலைமடி வீழ்ந்தொரு சூர்யன் அஸ்தமித்தான்" எனப்பாடிய கவிஞர் தோழர் நவபாரதி, அஸ்தமிக்கும் சூர்யன் மீண்டும் எழுவான் என்பதையும் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின், உலக அமைதி நாடுவோரின் நெஞ்சங்களில் என்றும் நிலைகொண்டு ஓளி பாய்ச்சுவார் தோழர் பாலன். 'முரண்சுவை' என்னும் தலைப்பில் அற்புதமாக தினமணி கதிரில் எழுத்தோவியம் வரைந்துள்ளார் திரைக்கலைஞர், சிந்தனையாளர் திரு ராஜேஷ் அவர்கள்.
















சில காலம் பார்வார்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து செயலாற்றினார். இடைக்காலத்தில் திருச்சியில் தற்காலிகமாக முனிசிபல் சிப்பந்தியாகவும் வேலை செய்தார். பொன்மலையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "தொழிலரசு' என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராக கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து பணிபுரிந்தார்.​ ரயில்வே தொழிலாளர் இயக்கத்திலும் தொடர்பு கொண்டிருந்தார்.


- ராஜேஷ்



தமிழகத்தில் வாழ்ந்த பல கம்யூனிஸ்ட் தியாகிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கே.பாலதண்டாயுதம். அவரது ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள மாக்கினாப்பட்டி. அங்கு 1918-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 2-ம் தேதி பிறந்தார்.​ அவரது தந்தையின் பெயர் காளேஸ்வர முதலியார். ஊரில் பெரிய மனிதராக விளங்கினார்.​ பாலதண்டாயுதத்தை பாலன் என்று அன்புடன் அழைத்தார்கள். பெயர்தான் பாலன், அவரோ பெரிய அரசியல் மேதை.



நண்பர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பணத்தையோ, உடையையோ,​​ வேறு எந்தப் பொருளையோகூட அவர் என்றுமே வாங்கிக் கொண்டதில்லை. ஒரு காலத்தில் படித்த இளைஞர்கள் மத்தியிலும், கம்யூனிஸ்டு அணிகள் மத்தியிலும், ஒரு ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவர் என்று இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன்.





இரண்டாம் உலகப் போரை எதிர்த்துப் பேசிய பேச்சுக்காக 1940-ம் ஆண்டு தோழர் பாலனுக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1938 முதல் 1948 வரையான காலகட்டத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம்,​​ சுமார் 9 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். தாயை இழந்தார், மனைவியைப் பிரிந்தார், வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு ஆளானார்.



மேடையில் பேச ஆரம்பிக்கும் முன்பு, ""வீட்டை விட்டுப் புறப்படுகிறபோதே என் மனைவியிடம், வந்தால் வரவில் வை. வராவிட்டால் செலவில் வை என்று சொல்லி விட்டுத்தான் வந்திருக்கிறேன்'' என்று சொல்லுவார்.



நடுப்பகல் பசி நேரத்தில் பாலன் ஒரு மணி நேரம் பேசினால்கூட கைதட்டல் தவிர வேறு எந்த அசைவும் கூட்டத்தில் இருக்காது.



1945-ம் ஆண்டு பாலனை நெல்லையில் காவல்துறை கைது செய்ய நெருங்கும்பொழுது,​​ அவர் பேசிய வீர வசனம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அந்த வசனத்தின் பாதிப்பு 1950-களில் வெளிவந்த பல திரைப்படங்களில் இருந்தது. பல கதாநாயகர்கள் பாலன் பாணியில் பேசி புகழ் பெற்றார்கள்.



1948-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பாலன் தலைமறைவானார்.​ அந்த சமயம் ஒருநாள் போலீஸ்காரர்கள் பாலனைத் தேடி அவர் மறைந்திருந்த வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள். அடைக்கலம் கொடுத்த அந்த வீட்டுக்காரம்மா உடனே விறகுக் கட்டைகளை எடுத்து பாலன் மேல் அடுக்கி வைத்து அவரை தப்பிக்க வைத்தார்.



தலைமறைவாக இருந்த காலத்தில் கோதுமைத் தவிடு மலிவாக இருந்தது. அந்தக் கோதுமைத் தவிட்டைப் பனை வெல்லத்துடன் சேர்ந்து தண்ணீர் விட்டுப் பிசைந்து சாப்பிட்டு வந்தார். இப்படி பாலன் பல நாட்கள் சாப்பிட்டதால் இவருக்கு வயிற்று வலியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டன. இப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பல பேர் மனநோய்க்கு ஆளானார்கள்.



தலைமறைவாக இருக்கும்போது,​​ இரவில் சந்தேகப்படும்படியான சத்தம் கேட்கும்போதெல்லாம் புகைக்கூண்டு வழியாக பாலன் தப்பித்துவிடுவார். தலைமறைவாக இருந்தபோது பாலனின் இரு கால்களிலும் எக்ஸிமா சிரங்கு இருந்தது. அதில் இருந்து ஒரே நீராக வடியும். அதை சாதாரணமாக தாங்கிக் கொள்வார்.​ தினசரி ஒரு புதுக் துணி வாங்கிக் கொண்டு வந்து, கால்கட்டு போடுவார்களாம் மக்கள்.



இரவில் நாய் குரைக்கும் சத்தத்தை வைத்து, பாலன் ""இந்த சத்தம் மற்ற நாய்களைப் பார்த்துக் குறைக்கிறது; ஆள் வரும் சத்தத்தை கேட்டு அல்ல'' என்று கூறக் கூடிய அளவுக்கு அவரை தலைமறைவு வாழ்க்கை தயார்படுத்தியிருந்தது.



சிறைக்குச் செல்லுமுன், அவருடைய மனைவியைத் திருச்சியில் முத்துராமலிங்கத் தேவரின் நண்பரான ரத்தினவேல் தேவர் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் சிறை சென்றார்.



ஒருமுறை சிறைச்சாலையில் நிகழவிருந்த ஒரு கலகத்திலிருந்து சிறை அதிகாரிகளையும், கைதிகளையும் காப்பாற்றினார். இதற்காக சிறை அதிகாரிகள் பாலனைப் பாராட்டினார்கள்.



1971-ல் நாடாளுமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் திறம்படச் செயல்பட்டார். அங்கிருந்த பல கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவரது திறமையைப் பாராட்டியுள்ளனர்.



பேரறிஞர் அண்ணாவையும், தி.மு.க.வையும் தர்க்கரீதியாகவும் அதே சமயம் எளிமையாகவும் பாலனை போல வேறுயாரும் தாக்கிப் பேசி இருக்க முடியாது.



தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்கியே தீருவேன் என்று மனதிற்குள் சபதம் செய்து கொண்டு, அ.இ.அ.தி.மு.க. ஆரம்பித்த புதிதில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அரசியல் களத்தில் பணி புரிந்தார் பாலன். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததோ 1977-ம் ஆண்டு. ஆனால் 31.5.1973- அன்றே விமான விபத்தில் பாலதண்டாயுதம் பலியானார்.



மிக உயர்ந்த லட்சியத்துக்காகப் பாடுபட்ட பாலன் பூமியில் மரணமடையாமல் வானவீதியிலேயே பஞ்ச பூதங்களோடு கலந்துவிட்டார். உயிரோடு இருந்தபோது நாடு அவருக்கு ஒரு மரியாதையையும் செய்யவில்லை, இறுதி மரியாதை செய்யும் சிரமத்தையும்கூட அவர் நமக்குக் கொடுக்கவில்லை.



(நன்றி: தினமணி கதிர்)

WELCOMING FUNCTION TO DEVARTV

Damage to Thevar statue triggers stir

Followers of Muthuramanlingam Thevar staged a protest on Thursday condemning the damage to a Thevar statue near Usilampatti.



As a result, vehicle movement was affected for nearly five hours on Elumalai-Usilampatti main road.


Sources said that the driver of the TNSTC bus had accidentally hit the basement of a Thevar statue at Kodangi Naickan Patti near Usilampatti on Wednesday.


Following the incident, members of Bharathiya Forward bloc (Vallarasu Branch) (BFBV) staged road roko on Elumalai - Usilampatti main road.

In this connection, the police have already booked cases against seven persons and arrested Suresh, Bose, Agni on Wednesday.



However, the supporters withdrew their protest after officials from TNSTC and revenue department promised to repair the damaged basement of the statue.

 

Thursday, June 13, 2013

Six die in accident on way to temple

Six persons, three of them children, were killed and 12 injured in a road accident near Chinnamanur, in Theni district, on Wednesday. The mishap turned fatal when they were travelling in an open mini truck from Cumbum to offer worship to their family deity at Karumathur, in Madurai.




Ocha Thevar (45), a farmer of Cumbum, and 17 of his relatives were on way to Munusamy temple in Karumathur. When the truck, driven by Ocha Thevar’s son Mani, crossed Keelapoola­nandhapuram, near Chinnam­anur, it rammed into a parapet wall.



In the impact, the occupants, who were all standing, were thrown out of the roofless vehicle while those travelling seated got trapped, suffering grievous injuries. Passersby called for 108 ambulance service. The ambulance team retri­e­ved the bodies of five persons–Ocha Thevar, Praveena (24), Pappaathi (70), Jeyapra­kash (10) and Chellathurai (4) - who had been instantly killed after they were flung from the truck.



The remaining 13 persons were rushed to Chinnamanur government hospital where seven-year-old Barath Kumar succumbed, failing to respond to treatment. After first-aid, the injured were taken to the government hospital in Theni where the condition of some is stated to be critical.



The driver probably slept while at the wheel and this led to the mishap, a cop surmised. “The common sight in Theni district is to see farmers from villages risking their lives by travelling in open goods trucks,” a local said.



முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுக்கரசர்-ஜெயந்தி ஆகியோரது மகன் திருமணம்

முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுக்கரசர்-ஜெயந்தி ஆகியோரது மகன் அன்பரசு-டாக்டர் அ.ஐஸ்வர்யா திருமணத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.அருகில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், இல.கணேசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், கவிஞர் காசி முத்துமணிக்கம், சு.திருநாவுக்கரசர் மற்றும் அவருடைய குடும்பத்தினர்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய கிருஷ்ணசாமிக்குத் தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி கலவரம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கிருஷ்ணசாமி மாவட்டத்தில் நுழைவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




புதிய தமிழகம் கட்சி சார்பில் ஜூன் 13-ஆம் தேதி  இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவிக்கக் கோரியும், பள்ளர் இனத்தை தேவேந்திர வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்ணாவிரதம் நடத்த இருப்பதாகவும், இதில் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு அளித்திடக் கோரி காவல் நிலையங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பட்சத்தில் ஜாதி ரீதியிலான மோதல்கள் உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவின் பேரில் 11.6.13 முதல் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைவதற்கும், உண்ணாவிரதங்களுக்கும் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.



Send an SMS, and your train ticket is booked!

Say goodbye to internet. From July onwards booking rail tickets will be as simple as sending an SMS


Any mobile user can operate this system using handsets ranging from feature phones to smartphones.
IRCTCIn a time most of things like banking booking air tickets, calling a cab and so on can be done through mobile phone, Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) plans to use SMS services of mobile phones from July to make rail ticket booking easier.

According to a newspaper report quoting a senior IRCTC official, "The bookings can be made from anywhere and at any time in a secure manner without a need to log onto the internet or stand in a queue."

The report further added that any mobile user can operate this system using handsets ranging from feature phones to smartphones.



In contrast to the current procedure of booking rail tickets on mobile which are done through a web browser or app, the proposed service will enable user to book ticket through a simple SMS or a menu-based dialing service which is mostly used by the banks nowadays to offer account services to its clients.

Though not much clarity is there about how will the new ticket booking system work but as the launch date approaches IRCTC will be sharing further information of the same.

In the last couple of months IRCT has been has been adopting mobile technology in a big way to make the rail journey of passengers, right form booking a ticket to reaching destination, a smooth experience.

It all started in January 2012, when IRCT started working on revamping its mobile apps for booking tickets from smartphones ( different OS).

Following that Railways also allowed passengers to show SMS sent from IRCTC as proof of ticket instead of paper tickets while travelling to ticket examiner.



Wednesday, June 12, 2013

JULY 6 - Meeting - Mr.Shanmugaiah Pandian

முதன்முறையாக கமலுடன் இணைகிறார் விவேக்.

நகைச்சுவை நடிகர் விவேக் முதன்முறையாக கமலுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.




தற்போது விஸ்வரூபம் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கமல் இந்தப் படத்துக்கு பிறகு லிங்குசாமி தயாரிக்கும் படத்தை இயக்கி நடிக்கவும் செய்கிறார். கமல்ஹாசன்-லிங்குசாமி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. படத்திற்கு 'உத்தம வில்லன்' என்று பெயர் சூட்டப் பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகிறது. படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.



படத்தில் கமல், காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிப்பதால்தான் உத்தம வில்லன்' என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இவைத்தவிர நகைச்சுவை நடிகர் விவேக் முதன்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.ரஜினி முதல் தற்போது இருக்கும் இளம் நாயகர்கள் வரை அனைவருடனும் இணைந்து நடித்த விவேக்கிற்கு, கமலுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் எட்டா கனியாக இருந்தது. இந்நிலையில் அதுவும் கூடிய விரைவில கைகூட இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் விவேக்.



Monday, June 10, 2013

சென்னை - திருச்சி - மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் ஜூன் 22 முதல் இயங்கும் என டி.ஆர்.பாலு தகவல்

சென்னை- திருச்சி - காரைக்குடி சிலம்பு எக்ஸ்பிரஸ் புதிய ரயில் சேவை ஜூன் 22ஆம் தொடங்குவதற்கு ரயில்வே வாரியம் முடிவெடுத்திருந்தது. இதனையடுத்து பொது மக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் இந்த ரயில் சேவையை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதின் அடிப்படையில், சென்னை - திருச்சி -காரைக்குடி - தேவகோட்டை வழியாக மானாமதுரை வரை இயக்கப்படும் என ரயில்வே வாரியம் இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.




இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 8.20க்கு புறப்படும். திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை வழியாக மறுநாள் காலை 7.45க்கு மானாமதுரை சென்றடையும். மறு மார்க்கத்தில் மானாமதுரையிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு காலை 6.30க்கு சென்றடையும். இந்த புதிய எக்ஸ்பிரஸ் சேவை சென்னையில் இருந்து புதன் மற்றும் சனி கிழமையும், மானாமதுரையிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் ஆக வாரம் இரண்டு முறை இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைமை அதிகாரிகள் திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவரும், ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் சேவையானது முன்னர் அறிவிக்கப்பட்ட அதே தேதியிலிருந்து (ஜூன் 22) இயக்கப்படும். என டி.ஆர். பாலு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.