Thursday, June 13, 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய கிருஷ்ணசாமிக்குத் தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி கலவரம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கிருஷ்ணசாமி மாவட்டத்தில் நுழைவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




புதிய தமிழகம் கட்சி சார்பில் ஜூன் 13-ஆம் தேதி  இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவிக்கக் கோரியும், பள்ளர் இனத்தை தேவேந்திர வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்ணாவிரதம் நடத்த இருப்பதாகவும், இதில் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு அளித்திடக் கோரி காவல் நிலையங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பட்சத்தில் ஜாதி ரீதியிலான மோதல்கள் உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவின் பேரில் 11.6.13 முதல் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைவதற்கும், உண்ணாவிரதங்களுக்கும் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.



No comments: