சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் என்கவுன்டர் மூலம் 3 பேரை கொலை செய்த காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேவரின இளம்புலிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் செயலாளர் எஸ்.ராஜமறவன் மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற நூலை தமிழக அரசு தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த புத்தகத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ஏற்கெனவே போலி என்கவுண்டர் மூலம் 3 காவல் துறையினரால் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கையை காவல் துறையினர் கைவிட வேண்டும்.
இல்லையேல், இச் செயலைக் கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றார்.
பேட்டியின்போது, ஒருங்கிணைப்பாளர்கள் தூத்துக்குடி எஸ்.விக்னேஷ், மதுரை மறத்தமிழன் ரூபன் ஆகியோர் உடனிருந்தனர்.
.

No comments:
Post a Comment