புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் பூவரசக்குடி அருகே கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் பலியான 7 மாணவர்களின் குடும்பத்தினருக்கு சு. திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட விஜயரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் கடந்த 19.6.2013-ம் தேதி பால் வேனில் லிப்ட் கோட்டு வல்லத்திராக்கோட்டையிலுள்ள அரசு பள்ளிக்கு சென்ற போது பூவரசக்குடி அருகே எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதால் வேனில் இருந்த மாணவர்கள் 7 பேர் மற்றும் ஓட்டுனர் உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
விபத்தில் மாணவர்களைப் பறி கொடுத்த விஜயரகுநாதபுரம் கிராமம் இதுவரை சோகத்திலிருந்து மீளவில்லை. செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டைக்கு வந்த சு. திருநாவுக்கரசர் அங்கு நேரில் சென்று உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

No comments:
Post a Comment