சென்னையில் இன்று விதார்த் நடித்த கொள்ளைக்காரன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர் தங்கர்பச்சான் பேசுகையில், இதுபோன்ற ஆடியோ விழாக்களெலலாம் தேவையே இல்லை என்று பேசத் தொடங்கியவர், தமிழனுக்கு எங்குமே மரியாதை இல்லை. முல்லை பெரியாறு பிரச்சினையில் அரசாங்கமும், கட்சிகளும் பேசி வருகின்றன. ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. இனி நாமே எதிர்ப்பை காட்ட வேண்டியதுதான். அதை வெளிப்படுத்தும் வகையில் இதுவரை நாம் வாங்கிய தேசிய விருதுகளை அவர்கள் முகத்தில் விட்டெறிய வேண்டும். நானெல்லாம் தேசிய விருது வாங்கியிருந்தால் அதை செய்திருப்பேன் என்று செம சூடாக பேசினார்.
ஆனால் இதன்பிறகு பேசிய கவிஞர் வைரமுத்து, இதுபோன்ற விழாக்கள் அவசியம் வேண்டும். அப்படி இல்லையென்றால் தங்கர்பச்சான் போன்றோர்களின் பேச்சை எங்குபோய் கேட்டுத்தொலைப்பது என்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். காரணம், ஏற்கனவே பலமுறை தேசிய விருதுகள் வாங்கியவர் வைரமுத்து. அவர் இருக்கிற மேடையில் இப்படி வாங்கிய தேசிய விருதுகளை விசிறியடிக்க தங்கர்பச்சான சொன்னதால் ஆவேசமாக விட்டார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment