இன்று (டிசம்பர் 14) அமெரிக்காவின் நியூயார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரசின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு நடைபெற உள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ள இதில், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு செய்திகள் கலந்தாய்வு செய்யப்பட இருப்பதாகவும், இந்த அமர்வில் நாடு கடந்த தமீழீழ அரசோடு தோழமை கொண்டுள்ள பிற நாடுகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது. இதில், 2012 ஆம் ஆண்டில் தமிழீழப் போராட்டத்தை முன்னிறுத்தி, உலக அரங்கில் பல்வேறு முனைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் நா.க.த.அ கூறியுள்ளது.
மேலும், ஈழத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், காணமல் போதல், சிங்களக் குடியேற்றங்கள் போன்ற பல்வேறு அநீதிகளை, உலகத்தின் கண்களின் முன் கொண்டுவருவது குறித்து கலந்தாய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
No comments:
Post a Comment