போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆம்னி பஸ் நிலையம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அமைக்கப்பட உள்ளது.
இந்த இடத்தை இன்று மேயர் ராஜன் செல்லப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை போக்குவரத்து நெரிசலை குறைக்க மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் தற்காலிகமாக ஆம்னி பஸ் நிலையம் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
30 புக்கிங் ஆபீஸ்களும், ஒரே நேரத்தில் 60 பஸ்கள் நிறுத்தும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்படும். குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இன்னும் 3 மாதத்தில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும். இந்த பஸ் நிலையத்தால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பின்னர் நிரந்தரமாக இங்கு பஸ் நிலையம் அமைக்க முதல்வரிடம் ஆலோசனை மற்றும் நிதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேயருடன் கமிஷனர் நந்தகோபால், துணைமேயர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர்கள் மதுரம், தேவதாஸ், வக்கீல் ராமேஷ், நிலையூர் முருகன், ஐ.பி.எஸ். பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment