கோபாலசமுத்திரத்தில் நிகழ்ந்த சம்பவங்களில் போலீஸார் பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தேவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுவினர் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட தேவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஏ. ராமச்சந்திரன் திங்கள்கிழமை கூறியதாவது:
கோபாலசமுத்திரம் சம்பவத்தில் காவல்துறை பாரபட்சமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேச அரசு முன்வரவில்லை. தவறு செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.
சமுதாயத் தலைவர்கள் கோபாலசமுத்திரத்துக்குச் சென்று, மக்களை சந்திக்க போலீஸ் அனுமதி மறுக்கிறது என்றார் அவர்.
பேட்டியின்போது, அகில இந்திய முக்குலத்தோர் மறுமலர்ச்சி இயக்க நிறுவனர் ஏ. வேல்முருகன், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலர் கே. வேதாந்தம், மூவேந்தர் மக்கள் கழக மாநிலச் செயலர் என். சண்முகராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
.
No comments:
Post a Comment