திலகர் பட இயக்குனருக்கு மறத்தமிழர் சேனை கண்டனம்.
திலகர் படம் பெயர் குறித்த கருத்தில் 'அமீர் அவசரக்கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டார்' என்று எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்களை இயக்குனர் பெருமாள் பிள்ளை சந்தித்து உள்ளார்.
தமது பேட்டியில் 'இது முக்குலத்தோர் சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளம்குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது' என்று அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.
"நா காக்க தவறிய இயக்கு'நரை' மறத்தமிழர் சேனை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்."
ஏதோ தேவர்கள் மட்டுமே குற்றசமூகத்தவர்கள் போலவும், இந்த சமூகத்தை 'சினிமாவின் மூலமாக' திருத்தி விட்டால், தமிழகம் வன்முறையற்ற அமைதி பூங்காவாகிவிடும் என்கிற தொனியில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது.
தென்மாவட்டங்களில் குண்டூசி வைத்திருந்தாலே குண்டர் சட்டத்தில் அடைக்கும் நிலையில், 'ஆயுதங்களே மனிதனை தீர்மானிக்கின்றன' என்று விளம்பரம் செய்யும், 'பிழைப்பிற்காக தேவர்களின் வாழ்வியலை பிழைபட படமாக்கும்' செயல்களை உங்களைப் போன்றவர்கள் விட்டுவிட்டாலே போதும்.
No comments:
Post a Comment