Monday, September 15, 2014

கோட்சேயின் வாக்குமூலம் ! Shared by : Mohun Chandar


காந்திஜியால் தான் விடுதலை கிடைத்தது என்று மீண்டும் மீண்டும் கொண்டாடுவதைக் கண்டு நான் வியக்கிறேன். சுயராஜ்யம், விடுதலை ஆகிவற்றை வென்றது குறித்து நான் ஒன்றையே கூறி வருகிறேன். அதில் காந்திஜியின் பங்கு மிகக்குறைவு. ஆனால் அவர் ஓர் உண்மையான தேசபக்தர் என்ற இடத்தை அளிக்க நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் அவருடைய போதனைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. அவருடைய தலைமை நாட்டை கேலிக்குரிய தாக்கிவிட்டது. என் கருத்தில் சுபாஷ் சந்திர போஸ் (NETHAJI) தான் மாவீரரும் நவீன இந்தியாவின் தியாகியும் ஆவார். அவர் பொதுமக்களின் புரட்சி மனப்பான்மையை உயிரூட்டத்துடன் பேணிவந்தார். இந்திய விடுதலைக்கு எல்லா கௌரவமான வழிகளையும் பரிந்துரைத்தார். காந்திஜியும் அவருடைய தன்னல கூட்டமும் சுபாஷ் சந்திர போஸை அழிக்க முயன்றனர். இவ்வாறு மகாத்மாவை இந்திய விடுதலை சிற்பி என முன்நிறுத்துவது முற்றிலும் தவறானதாகும். 1857-1932,1942 கலகமும் அதன்பின் சுபாஷ் சந்திர போஸ் அமைத்த ஆயுதந்தாங்கிய புரட்சி - ஆகியன இவைதாம் இந்தியாவில் இருந்த தீவிரவாத இயக்கங்களில் புரட்சி மனப்பான்மையுடன் பரவியதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தகர்த்து எறியப்பட்டதற்கான உண்மை காரணிகள் ஆகும். இத்தகைய எல்லா தீவிர முயற்சிகளும் காந்திஜியால் எதிர்க்கப்பட்டன. தேசபக்தி உணர்வை உள்வாங்கி பிரிட்டிஷாருடன் போராடி இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் உரிய பாராட்டினை வழங்கிட வேண்டும். காலஞ்சென்ற லோகமான்ய திலகர், என்.சி.கேல்கர், சி.ஆர்.தாஸ், வித்தல்பாய் பட்டேல் (சர்தார் பட்டேல் சகோதரர்), பண்டித மாளவியா, பாய் பரமானந், கடந்த பத்தாண்டுகளில் செல்வாக்கு பெற்றிருந்த இந்து சபா தலைவர்கள் ஆகியோராவர். ஆனால் இந்த சித்தாந்தமுடைய தியாகிகள் , அறிஞர்கள் எல்லாம் காந்திஜியாலும் அவரை பின்பற்றுபவர்களாலும் வேலை வேட்டையாடுபவர்கள் அல்லது அதிகாரம் தேடுபவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்படி சொன்னவர்கள்தாம் அதே முறைகளை அடிக்கடி பின்பற்றினார்கள். மற்றுமொரு காரணம், மிகவும் முக்கிய காரணம் சர்ச்சில் தூக்கி எறியப்பட்டு தொழிற்கட்சி பதவிக்கு வந்தது, அஞ்சவைத்த பொருளாதார நிலை, போரின் காரணமாக பிரிட்டனை ஓட்டாண்டியாக்கிய நிதிநிலை ஆகியவை பிரிட்டிஷாரை ஆட்சியில் இருந்து விலக வைத்தன. மறைக்கப்பட்ட வரலாறு கோட்சேயின் வாக்குமூலம் பத்தி: 85,86(I,II,III).

No comments: