சென்னையில் மட்டுமே, கிபி 2000 க்கு முன்பு, தமிழ்ப்படங்கள் 6 திரையரங்குகள் வரை திரையிடப்படும். அந்த திரையரங்குகளின் பெயர்கள், பின்வரும் ஏரியாக்களின் வரிசையிலேயே நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும்,
1.அண்ணாசாலை
2.பூந்தமல்லிசாலை/புரசைவாக்கம்
3.அசோக்நகர்/வடபழனி
4.வடசென்னை
5.ECR
அன்றைய அண்ணாசாலையின் முக்கிய திரையரங்குகள் ஆனந்த் காம்ப்ளக்ஸ், தேவி காம்ளக்ஸ், சத்யம் காம்ப்ளக்ஸ், அலங்கார், காஸினோ, சபையர் காம்ப்ளக்ஸ், மிட்லண்ட் காம்ப்ளக்ஸ், உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஆல்பட் காம்ப்ளக்ஸ், கெயிட்டி, சாந்தி திரையரங்குகள் தான்.
பூந்தமல்லிசாலை/புரசைவாக்கத்தின் முக்கிய திரையரங்குகள் சங்கம் காம்ளக்ளஸ், அபிராமி காம்ளக்ஸ், ஈகா திரையரங்குகள் தான்.
அசோக்நகர்/வடபழனியின் முக்கிய திரையரங்குகள் உதயம் காம்ளக்ளஸ், AVM ராஜேஸ்வரி, காசி, கமலா திரையரங்குகள் தான்.
வடசென்னையின் முக்கிய திரையரங்குகள் மகாராணி, அகஸ்தியா, பிருந்தா, கிரெளன், பாரத் திரையரங்குகள் தான்.
ECR-ல் அன்று இருந்ததோ ஒரே முக்கிய திரை தான், அதுவும் டிரைவ் இன் தியேட்டர் பிரார்த்தனா தான்.
சென்னையின் அனைத்து ஏரியாவிலும், அனைத்து திரையரங்கிலும், திரையரங்கு காம்ளக்ஸாக இருந்தால் அந்த காம்ளக்ஸின் ஒவ்வாரு தியேட்டரிலும், ரெகுலர் காட்சிகளாக (4 or 3 Shows ) 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படங்களை கொடுத்தது உலகநாயகன் கமல்ஹாசர் ஒருவரே.
ரஜினிக்கு எத்தனை தியேட்டரில் இப்படி ஓடியிருக்கிறது என்று தேடிப்பார்த்தால், பேபி ஆல்பட்/பால அபிராமி/கமலா/உதயம் மட்டுமே மிஞ்சுகிறது. ரஜினியின் சூப்பர்ஹிட் படங்கள் என்று கூறப்படும் பாட்ஷா, படையப்பா கூட பகல்காட்சியில் தான் வெள்ளி விழா கண்டது என்பது மறைக்கப்பட்ட உண்மை.
சென்னையில், கமல்ஹாசரின் சகலகலா வல்லவன் மட்டுமே அதிகபட்சமாக 4 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது.
1.அலங்கார் (3 காட்சிகள்), ,
2.அன்னை அபிராமி (4 காட்சிகள்),
3.AVM ராஜேஸ்வரி(4 காட்சிகள்),
4.மகாராணி (3 காட்சிகள்)
இதற்கு அடுத்து சென்னையில், கமல்ஹாசரின் வாழ்வே மாயம் மட்டுமே அதிகபட்சமாக 3 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது.
1.காஸினோ (4 காட்சிகள்),
2.கமலா (4 காட்சிகள்),
3.மகாராணி (3 காட்சிகள்)
ட்ரைவ்-இன் தியேட்டரில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவதென்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் இரண்டு முறை அந்த சாதனைகளை செய்தது கமல்ஹாசர் மட்டுமே
1.இந்தியன்
2.அவ்வைசண்முகி
மேலும், சென்னையில் கமல்ஹாசருக்கு மட்டுமே, தமிழ் டப்பிங் மற்றும் பிற மொழி படங்களும் 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சியாக ஓடியுள்ளது...
மரோசரித்ரா (தெலுங்கு) - 595 நாட்கள்
ஏக் துஜே கே லியே (ஹிந்தி) -105 நாட்கள்
சத்மா (ஹிந்தி) - 119 நாட்கள்
சாகர் (ஹிந்தி) - 105 நாட்கள்
கோகிலா (கன்னடம்) - 175 நாட்கள்
ராஸலீலா (மலையாளம்) - 100 நாட்கள்
சாணக்யன் (மலையாளம்) - 100 நாட்கள்
இரு நிலவுகள் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சலங்கை ஒலி (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
இந்திரன் சந்திரன் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
பாசவலை (தமிழ் டப்பிங்) - 108 நாட்கள்
No comments:
Post a Comment