Tuesday, October 21, 2014

தீபாவளி அன்று நீராட வேண்டிய நேரம்


தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாட வேண்டிய பண்டிகையே தீபாவளித்திருநாள். 22-ந்தேதி அதிகாலையில் (சுமார் 5.30 மணிக்கு முன்பாக) அனைவரும் நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். புதிய ஆடைகள் உடுத்திக் கொண்டு பட்டாசு வெடித்து, பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். நரகாசுரனின் தாயார் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று நரகாசுரனை சம்ஹாரம் செய்த ஸ்ரீமகாவிஷ்ணு தீபாவளியன்று இவ்விதம் செய்பவர்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று ஆசி செய்தார். தீபாவளியன்று அதிகாலையில் சந்திரன் இருக்கும்போதே முறையாக நல்லெண்ணை தேய்த்துக் கொண்டு வெந்நீரில் ஸ்னானம் செய்பவர்களுக்கு நரக, எம பயம் ஏற்படாது. அன்று மட்டும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், ஜலத்தில் கங்காதேவியும் வாசம் செய்வதால் அனைவரும் அன்று வெந்நீரில்தான் நீராட வேண்டும். நீராடல் செய்யும் போது நாயுருவிச் செடியை மூன்று முறை தலையைச் சுற்றி தூர எறிந்துவிட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.

No comments: