Thursday, January 22, 2015

சென்னையில் ஜனவரி 23 நேதாஜி பிறந்த தினம் அன்று இரத்த தானம் முகாம்:

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து இராணுவ படை அமைத்து இந்திய சுதந்திரத்திற்கு பெரிதும் பாடுபட்ட இராணுவ வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ஜனவரி-23, 2015 அன்று சரியாக காலை 9.30 மணியளவில் “இரத்த தான முகாம்” வீரத்தந்தை நேதாஜி பவுண்டேசன் மூலம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களின் படைகளை, இரத்தம் சிந்தி, உயிரை பனைய வைத்து எதிர்த்து போராடிய நேதாஜி தலைமையிலான இராணுவ படைகளுக்காக, நாம் அனைவரும் நேதாஜியின் பிறந்த நாளன்று தானத்தில் சிறந்த தானமான இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டுகிறோம்.

மேலும் நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால் கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பே பதிவு செய்யுமாறு வீரத்தந்தை நேதாஜி பவுண்டேசன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:
G.ஐயப்பன் – 9884448002
தமிழன்பன் - 9841167891

நீங்கள் கொடுக்கும் உங்களது இரத்தம் சாதாரண இரத்தமாக இருக்காது. பல உயிர்களுக்கு உங்களுடைய நல்ல உணர்வுகளையும், வீரத்தையும் ஊட்டும் இரத்தமாக தான் இருக்கும்.

நேதாஜியின் பாதையில் செல்வோம்!
புதியதோர் இந்தியாவை அமைப்போம்!!

ஜெய்ஹிந்த்!!!



நேதாஜி மாத இதழ்

No comments: