போர் குணம் செறிந்த எத்தனையோ வீரர்களை கண்டிருப்போம் ஆனால் பல தியாகிகள் மறைக்கப்பட்டுவிட்டார்கள் !
மதுரையை அடுத்த மேலூர் என்ற ஊரை சேர்ந்த "தென்பாண்டி சிங்கம் "வாளுக்கு வேலி அம்பலகாரர் இவர் சிவகங்கை சீமையில் மருது பாண்டிய சகோதரர்களுக்கு உற்ற தோழராவார் ..ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நிறைந்த அந்த காலத்தில் அனைத்து மன்னர்களையும் தண்டனைக்கு உள்ளாக்கினர் பலரை கொடூரமான முறையிலும் ,மர்மமான முறையிலும் கொன்றனர் ..அதன் பின்னணியில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடங்க மறுத்த மருது சகோதரர்களை தூக்கில் ஏற்ற அழைத்து சென்றனர் இதனை தடுத்து நிறுத்த பெரும்படையோடு போனபோது வெள்ளையர்களின் சூழ்ச்சியால் கத்தபட்டு என்ற இடத்தில் பயங்கர படுகுழியில் குதிரையோடு விழுந்து மண்ணோடு மன்னாக சமாதியானார் .."மாவீரன் "வாளுக்கு வேலி அம்பலம் வீரமரணம் எய்திய சிவகங்கை சீமை பாகனேரி வாள்கோட்டைநாடு கத்தப்பட்டில் அவருக்கு சிலை வைத்து தெய்வமாக வழிபடுகிறார்கள் ..நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நம் மன்னர்களின் வரலாற்றை சொல்லுங்கள்..
No comments:
Post a Comment