Monday, June 10, 2013

இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி மத்திய அரசின் பச்சை துரோகம் : வைகோ

தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.




அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.



இத்தகைய சூழலில் இலங்கை இராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27 ஆம் தேதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.



தமிழக மக்களும் - தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.



இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவிக்கும் பிறநாட்டு இராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க முடியுமா? பயிற்சி தர முடியுமா?



தமிழ்நாட்டை - தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது. இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி யாதெனில், மே 27 ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இலங்கை இராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை” என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.



அப்படியானால், இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு தெரியாமலே நடக்கிறதா? இந்திய இராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா? தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?



ஈழத்தில் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ் இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.



இலங்கையில் 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் இராணுவ முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது.



இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் இலட்சக் கணக்கில் போர்க்கொடி ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற விபரீதமாகவே விளையும்.



உடனடியாக சிங்கள இராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும்.



ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

.

அம்மாடியோவ்...! ரூ.642 கோடி: மன்மோகன் வெளிநாட்டு பயணச்செலவு

:"கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக, 642 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது' என, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின் கீழ், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கான செலவு குறித்து கேட்கப்பட்ட தகவலுக்கு, பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில் தெரிவித்து உள்ளதாவது:பிரதமர், மன்மோகன் சிங், 2004ம் ஆண்டு முதல், 2013ம் ஆண்டு வரை, 67 நாடுகளுக்கு, அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், 63 பயணங்களுக்கான செலவுகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அண்மையில் சென்ற, நான்கு பயணத்தின் செலவினங்கள் குறித்த விவரங்கள், இன்னும் கணக்கிடப்படவில்லை.அந்த வகையில், பிரதமரின் வெளி நாட்டுப் பயண விமான செலவிற்காக மட்டும், 642 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, 2012ல் மெக்சிகோ மற்றும் பிரேசிலில் நடைபெற்ற, "ஜி 20' மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, 27 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது.முன்னாள் ஜனாதிபதி, பிரதிபா பாட்டீல், தன் ஐந்தாண்டு பதவிக் காலத்தில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக, 223 கோடி ரூபாய் செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தலைவர்களின் பிறந்த தின, நினைவு தின விளம்பரங்களுக்காக ரூ.142 கோடி செலவு : மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ் உட்பட, 15 முன்னாள் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு தின விளம்பரங்களுக்காக, கடந்த, 5 ஆண்டுகளில், மத்திய அரசு, 142 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.



இதுதொடர்பாக, மத்திய அரசின் விளம்பர பிரிவு இயக்குனரகம் வெளியிட்டுள்ள விவரம்:கடந்த, 2008-09 முதல், 2012-13 வரையிலான, ஐந்தாண்டுகளில், முன்னாள் தேசிய தலைவர்களின், பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களின் போது, பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக, 142 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக மகாத்மா காந்தி பிறந்த தின மற்றும் நினைவு தின விளம்பரங்களுக்காக, 38.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.



இதற்கு அடுத்ததாக, ராஜிவ் பிறந்த தின, நினைவு தின விளம்பரங்களுக்காக, 25.4 கோடி ரூபாயும், அம்பேத்கருக்காக (17.9 கோடி), இந்திரா மற்றும் ஜவஹர்லால் நேரு தொடர்பான விளம்பரங்களுக்காக, 27.8 (16.9 + 10.9) கோடி ரூபாயும், சர்தார் வல்லபாய் படேல் (8.6 கோடி), பாபு ஜெகஜீவன் ராம் (6.2 கோடி), முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தொடர்பான விளம்பரங்களுக்காக, 3.0 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.இந்த விளம்பர பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில், அரசியல் சாராத நபர், சுவாமி விவேகானந்தர் மட்டுமே. சுவாமி விவேகானந்தர் தொடர்பான விளம்பரங்களுக்காக, 90 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய அரசின் விளம்பர பிரிவு தெரிவித்துள்ளது.





Friday, June 7, 2013

ஷாருக்கானுடன் நடிக்கிறார் மனோரமா

ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகை மனோரமா நடிக்க இருக்கிறார்.




ஷாருக்கான்-தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகை மனோரமாவும் நடிக்கிறார். சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள அவர், ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க உள்ளார்.



ஏற்கெனவே, இப்படத்தின் சில காட்சிகளில் அவர் தீபிகா படுகோனுடன் சேர்ந்து நடித்தார். உடல் நலம் குன்றியதால் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லை. தற்போது குணம் அடைந்து வரும் மனோரமா விரைவில் ஷாருக்கானுடன் நடிக்கும் காட்சிகளுக்காக சென்னை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.





HS dismisses petition against minister over hate speech

The Madurai bench of the Madras high court has dismissed a petition seeking direction to the director general of police (DGP), to register an FIR against the Union minister of state (MoS) in the Prime Minister's Office N Narayanasamy for his statement against the slain LTTE supremo Velupillai Prabakaran and Naam Thamizhar Katchi's co-ordinator Seeman.




A Madurai-based advocate C Ramesh had filed the writ petition before the Madurai bench a week ago, in which he contended that the statement of Narayanasamy was in the way of promoting enmity between Tamil-speaking and non-Tamil speaking Indians.



In his petition, the petitioner mentioned that Seeman had sought permission to conduct a public meeting in Cuddalore in support of the LTTE, for which the MoS had said that Seeman should be arrested and lodged in jail for 10 years for his act of supporting the LTTE. Besides, he further said that the LTTE leader Prabhakaran was a coward, who hid behind women and children at the time of war.



Following his statement, when the petitioner filed police complaint on May 21, there was no action taken on it. Hence, he filed a writ petition.



When the petition came up before the division bench comprising Justices N Paul Vasanthakumar and P. Devadass on Thursday, the bench dismissed the petition quoting jurisdiction reason.

Wednesday, June 5, 2013

விக்ரம் பிரபு நடிக்கும் அரிமா நம்பி


விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு அரிமா நம்பி என பெயரிடப்பட்டுள்ளது.



கும்கி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விக்ரம் பிரபு. பிரபுவின் வாரிசான இவர் தேடிச் சென்று இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். முதல் படமே பெரிய அளவில் பேசப்பட்டால் விக்ரம் பிரபுவை தேடி வாய்ப்புகள் வந்து அமைகின்றன. தற்போது இவன் வேற மாதிரி, கிகரம் தொடு போன்ற படங்களில் நடித்து வரும் இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



இயக்குனர் முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் சேகர் இயக்கும் இந்தப் படத்துக்கு அரிமா நம்பி என பெயரிட்டிருக்கிறார்கள். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சிவமணி இசையமைக்கிறார்.



ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் அரிமா நம்பி-யின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று துவங்கியது. இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக 'எதிர்நீச்சல்' நாயகி பிரியா ஆனந்த் நடிக்கிறார்

Tuesday, June 4, 2013

குவைத்தில் இந்தியர்களை வெளியேற்ற திட்டம்: தடுத்து நிறுத்த சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-




சவுதி அரேபிய அரசு நித்தாகாத் என்கிற ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து அறிவிக்கப்படாத அவசர நிலையை உருவாக்கி அந்நாட்டில் பணியாற்றும் இந்தியர்களை சட்டத்திற்குப் புறம்பாக வெளியேற்றி வருகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



நேற்று முன்தினம் 300-க்கும் அதிகமான மக்கள் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு, இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான குவைத் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.



இப்பிரச்சினையில் தங்களால் எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் உதவிடமுடியும் என்று தெரியவில்லை என்றும், குவைத் அரசுத் துறையிடம் இதுபற்றி பேசுவதாகவும் இந்தியத் தூதர் உறுதியளித்துள்ளார்.



இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், பணியாளர்களின் குழந்தைகளை பள்ளிக்கு விடச்சென்ற பெண்களையும் சாலையிலேயே நிறுத்தி பிடித்து வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வந்து வெளியேற்றுகின்றனர். குவைத் அரசு மேற்கொள்ளும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டுச் சட்டத்திற்கு முரணானவையாகும்.



நமது நாட்டின் பணியாளர்கள், எந்த அரபி அல்லது நிறுவனத்தின் விசா பெற்று அந்நாட்டிற்கு பணியாற்றச் சென்றனரோ, அவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டை அளித்து, உரிய கால அவகாசம் அளித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அங்கு பணியாற்றிவரும் இந்தியர்களின் கோரிக்கையாகும்.



நியாயமான இந்த கோரிக்கையை இந்திய அரசு, குவைத் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறைவேற்றிட முடியும். குவைத்தில் வாழும் இந்தியர்களைக் காக்க உடனடியாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திட தமிழக முதல்வர் அழுத்தம் தரவேண்டும் என்பதே அங்கு சிக்கலில் உள்ள தமிழர்களின் கோரிக்கையாகும்.



இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Monday, June 3, 2013

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா சிகிச்சை முடிந்து சனிக்கிழமை (ஜூன் 1) வீடு திரும்பினார்.




1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. 70 வயதை அண்மையில் நிறைவு செய்த அவர் சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.



இந்த நிலையில் உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை (மே 31) மனோரமாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.



இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜூன் 1) மாலை மனோரமா வீடு திரும்பினார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

.

Pol parties converge against Congress

Political parties in the state sans the ruling party Congress held a joint meeting on saturday and discussed ways to defeat the Congress in the next Parliamentary elections to be held next year.




The meeting held at the Imphal Hotel at North AOC started at 2pm and continued till around 5:30pm was attended by almost all the political parties active in the state including the Naga Peoples’ Front (NPF).



Other parties which attended are All India Forward Bloc (AIFB), Manipur People’s Party (MPP), Janata Dal (Secular), Janata Dal ( United), All India Trinamool Congress (AITC), Manipur State Congress Party (MSCP), Bharatiya Janata Party (BJP), Shiva Sena, Communist Party of India (CPI), Comminist Party of India (Marxist) etc, said the source.



The meeting minutely discussed on ways to contest the coming election and vote out Congress candidates from both the Inner and Outer seats, informed the source.



It is also learnt that the representatives discussed during the meeting on whether to project an Independent candidate and support him as a common candidate or to let only one party field its candidate and for all parties to endorse the candidate. However the meeting failed to come to any conclusion and adopt any specific resolutions, informed the source.



After all the attending political parties aired their respective opinions, it was agreed upon to hold another such meeting be held after June 18.



The meeting was presided over by Thounaojam Chaoba, president of Bharatiya Janata Party (BJP), Manipur Mandal.