Tuesday, May 28, 2013

தென்மாவட்டத்தில் திறக்கபடாத நிலையில் 32 தேவர் சிலை உள்ளது – தமிழக முதல்வருக்கு திரு.சண்முகையாபாண்டியன் கோரிக்கை

அகில இந்திய தேவர் குல கூட்டமைப்பு பொதுகூட்டம் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று ( 26.05.2013 ) மாலை 5.00 மணியளவில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேலபாவூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது . இந்த விழாவில் தேவர்குல கூட்டமைப்பு நிறுவன தலைவர் திரு.S.சன்முகையாபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு வீர உரை ஆற்றினர் . இந்த விழாவிற்கு தென்காசி பகுதில் இருந்து சுமார் 20 கிராம மக்கள் கலந்து கொண்டனர் .




தேவரின வரலாற்றை மாற்ற நினைபவர்களுக்கு எச்சரிக்கை :



இந்திய விடுதலைக்கு முதன்முதலில் வீர முழக்கமிட்டு வெள்ளையரை எதிர்த்து 17 வருடம் போராடியவர் மாமன்னர் புலித்தேவன் . அது தமிழக முதல்வருக்கு தெரிந்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டுக்காக தேவர் சமுதாயத்தின் வரலாற்றை மறைக்கிறார். சமிபத்தில் நாடார் சமுதாயத்தை சேர , சோழ , பாண்டியர் வழிதோன்றல்கள் என குறிப்பிட்டார் . இது முற்றிலும் தவறாகும் .யார் மூவேந்தர் வம்சம் என்று அவர்களுக்கே தெரியும் . வரலாறு தெரியவில்லை என்றால் தெரிந்துகொண்ட பிறகு பேசுங்கள் . வரலாறு மறைக்கப்படும் போது தேவரின மக்கள் பார்த்து கொண்டு அமைதியாக இருப்பார்கள் என்று கனவிலும் நினைக்க வேண்டாம் என்று தேவர் சமுதாயத்தின் வரலாற்றை மாற்ற நினைபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் .



தேவரின இளைஞர்களுக்கு வேண்டுகோள் :



தேவரின இளைஞர்கள் அனைவரும் மது பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். மற்ற பெண்களை சகோதரியாக நினைத்து அன்புடன் பழக வேண்டும் . மற்ற சமுதாய மக்களுக்கு எந்த வகையிலும் பிரச்னை கொடுக்க கொடாது . கல்வி வளர்ச்சியே சமுதாய வளர்ச்சி அதனால் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கூறினார்.

வன்கொடுமை தடுப்பு சட்டம் என்ற பெயரில் தலித் அல்லாத பிற சமுதாயங்கள் பாதிக்கபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சட்டத்தை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் .

தென்மாவட்டத்தில் திறக்கபடாத நிலையில் 32 தேவர் சிலை உள்ளது அதை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



No comments: