Saturday, May 19, 2012

மதுரை ஆதீன மடத்தில் 31ல் முற்றுகை போராட்டம்

மதுரை ஆதீன மடத்தை வரும் 31ம் தேதி முற்றுகையிட தேவர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் கணேசன், தமிழ்நாடு தேவர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பழனிவேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் 31,ம் தேதிக்குள் இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்யானந்தாவை நீக்க வேண்டும். தவறினால், 31,ம் தேதி மாலை 4 மணியளவில் கூட்டமைப்பு சார்பில் மேலமாசி வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.




பின்னர், ஆதீன மடத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர் சேதுபதி, தனக்கு சொந்தமான சொத்துக்களை மதுரை ஆதீனத்துக்கு வழங்கினார். ஆன்மிகப் பணிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காகவும் அவர் தனது சொத்துகளை தானமாக வழங்கினார். ஆனால், இந்தச் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் நித்யானந்தா செயலில் இறங்கியுள்ளார். பாஸ்கர சேதுபதியின் வாரிசுதாரர்கள் இது தொடர்பாக வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

எனவே மதுரை ஆதீனத்தின் பாரம்பரியத்தையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.



No comments: