Tuesday, August 21, 2012

கிரானைட் தொழிற்சாலைகளை உடனே திறக்க வேண்டும்: பார்வர்டு பிளாக் கோரிக்கை


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மது ரையில் மாநில பொருளாளர் மாயத்தேவர் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான பி.வி. கதிரவன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
 
இக்கூட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் ராஜசேகரன், ஜெயராமன், மாநில செயற்குழு உறுப் பினர்கள் சேவுகன், முத்துராமலிங்கம், பசும் பொன், சுப்புராஜ், தமிழன், கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் 24 முதல் 28 வரை சென்னையில் நடத்துவதற்கு அனுமதி தநத கட்சியின் மத்திய கமிட்டிக்கு இந்த மாநில செயற்குழு ஏகமனதாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
 
கட்சியின் ஒன்றிய மாநாடு மாவட்ட மாநாடுகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்திட வேண்டும் என தீர்மானிக்கிறது. தமிழ் மாநில மாநாடு நவம்பர் மாதம் சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருந்து வருகின்ற கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ள பி.ஆர்.பி. போன்ற நிறுவனங்களை மூடி சீல் வைத்ததை கண்டிக்கிறோம். சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் தங்கள் வாழ் வாதாரம் இழந்து நடுத்தெருவில் இருக்கிறார்கள்.
 
எனவே மூடப்பட்ட கிரானைட் ஆலைகளை மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக திறந்து தொழிலாளர்கள் நலன் பாதுகாக்க இந்த மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

No comments: