தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் 1003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இதனால் அவர் மீண்டும் இயக்குனர் சங்கத்தலைவராகிறார்.
தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தேர்தல் நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. மொத்தம் 2100 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள இந்த தேர்தலில் மொத்தம் 1279 வாக்குகள் பதிவானது. இதில் 1003 வாக்குகளைப்பெற்று தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் பாரதிராஜா வெற்றி பெற்றார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் அமீர் 901 வாக்குள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இயக்குனர் சேரன், சமுத்திரகனி இருவரும் துணைத்தலைவர்களாகவும், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment