இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
எனவே இலங்கை ராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாக ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளன. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில், சமீபத் தில் இலங்கை அதிபர் ராஜபக்சே அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகருக்கு தனிப்பட்ட முறையில் சென்று இருந்தார்.
அப்போது, அமெ ரிக்காவில் இயங்கும் தமிழ் அமைப் பினர் டெக்சாஸ் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். அதில், இலங்கை தமிழர் அமைப்பை சேர்ந்த ரகியார் மனோகரனை இலங்கை ராணுவம் கொன்றதாகவும் அதற்கான இழப்பீட்டு தொகையை அதிபர் ராஜபக்சே வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை டெக்சாஸ் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. பின்னர் அது கொலம்பியா மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து அதிபர் ராஜபக்சே நேரில் ஆஜராகுமாறு “சம்மன்” அனுப்பப்பட்டது.
ஆனால் நேரில் ஆஜராக ராஜபக்சே மறுத்துவிட்டார். இலங்கையின் அதிபராக பதவி வகிப்பவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் கோர்ட்டு வழக்குகளில் அதிபர் நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சம்மனை அவர் ஏற்க வேண்டிய அவசியமில்லை என நீதித்துறை அமைச்சக செயலாளர் சுகாதார காம்லத் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment