Monday, October 29, 2012

THEVAR JEYANTHI - NEWS


Thevar Jayanthi begins at Pasumpon

Thousands of followers of Muthuramalinga Thevar, paid their respects at his memorial in Pasumpon village near Kamuthi on Sunday.
The Thevar Jayanthi vizha, which will be celebrated for three days, began on Sunday in a grand manner at Pasumpon village. Followers of Thevar from different parts of the state, thronged the memorial and paid their homage on the first day itself.
Gandhi Meenal Natarajan, caretaker of the memorial, performed puja at the memorial during the wee hours of Sunday to mark the beginning of the event. The Kovai Kamatchipuri Adheenam performed special poojas at the memorial.
A group of followers, including women, from Kottaimedu took out a ‘Mulaipari’ procession to Pasumpon. A large number of followers from various parts of the district also arrived at the native place of  Thevar.
As part of security arrangements, the government has deputed 12 SPs, 10 additional SPs, 50 DSPs, 150 Inspectors and more than 5000 cops of 28 districts for Thevar Jayanthi.

Pasumpon Muthuramalinga Thevar - Rare Video




ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் தொண்டர்கள் பசும்பொன் பயணம் - ஒரு லட்சம் பேருக்கு நாளை அன்னதானம்
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி சிவகங்கையில் இருந்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், செல்வராஜ், கோவிந்தசாமி, சிதம்பரம், மதியழகன் உள்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் 500 வாகனங்களில் பசும்பொன் செல்கிறார்கள். மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் செல்லும் வழியில் ஸ்ரீதர் வாண்டையாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நாளை (30-ந்தேதி) காலை பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. பின்னர் பசும்பொன்னில் உள்ள பிரேம்குமார் வாண்டையார் நினைவு பந்தலில் ஒரு லட்சம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

பரமக்குடியில் பிளக்ஸ்பேனர் சேதம்: பொதுமக்கள் சாலை மறியல் - போலீசார் குவிப்பு
கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜை விழாவையொட்டி பரமக்குடி நகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பரமக்குடியில் உள்ள மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனரை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். 

இன்று காலை பிளக்ஸ் பேனர் சேதப்படுத்தப்பட்ட செய்தி அந்தப்பகுதியில் காட்டு தீ போல் பரவியது. உடனே அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேனரை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பரமக்குடி டி.எஸ்.பி. கணேசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

முத்துராமலிங்க தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்
முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் தேவரின் அரசியல் வாழ்வு குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றது. 2-ம் நாள் குருபூஜை விழாவையொட்டி ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். லட்சார்ச்சனை பூஜையும் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். முன்னதாக நேற்று இரவு தேரோட்டமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 105-வது ஜெயந்தி விழா, 50-வது குருபூஜைவிழா நேற்று முதல் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாளான நாளை (30-ந்தேதி) அனைத்து அரசியல்கட்சி தலைவர், முக்கிய பிரமுகர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

அஞ்சலி செலுத்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் வருமாறு:-

காலை 4 மணிக்கு தேவர் நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 8 மணிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார், 8.30 மணிக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் பி.என்.அம்மாவாசை, 8.45 மணிக்கு தேவர் மலர் அறக்கட்டளை பாலமுருகன், 9 மணிக்கு விஜயகுமார் சுவாமிகள் டிரஸ்ட் ராமதாஸ், 9.15 தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை எஸ்.ஆர்.தேவர், 9.30 மணிக்கு தமிழக அமைச்சர்கள், 10 மணிக்கு அ.தி.மு.க. கட்சியினர்,

புரட்சித்தலைவி பசுமை தமிழகம் சுந்தரராஜன், 10.30 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கதிரவன் எம்.எல்.ஏ., 10.45 மணிக்கு அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் அரசகுமார், 11.15 மணிக்கு மூவேந்தர் முன்னணி கழகம் டாக்டர் சேதுராமன், 11.30 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியினர், 11.45 தமிழ்நாடு முக்குலத்தோர் தேவர் சமூகம், 12 மணிக்கும் தி.மு.க. கட்சியினர்,

12.30க்கு பார்வர்டு பிளாக் சந்தானம், 12.45 தேவர் இளைஞர் பேரவை, 1 மணிக்கு முக்குலத்தோர் பாசறை, 1.15க்கு தமிழ் மாநில சிவசேனா பார்ட்டி, 1.30 மணிக்கு ம.தி.மு.க. கட்சி தலைவர் வைகோ அஞ்சலி செலுத்துகிறார். 2 மணிக்கு ஸ்ரீமான் தேவர் டிரஸ்ட், 2.10 மணிக்கு மருது பாண்டியர் முன்னேற்ற கழகம், 2.20 மணிக்கு தேவரின கூட்டமைப்பு, 2.30க்கு பசும்பொன் தேசிய கழகம், 2.40க்கு நாம் தமிழர் கட்சி, 2.50 மணிக்கு பார்வர்டு பிளாக் தினகரன்,

3 மணிக்கு மக்கள் கட்சி, 3.15 மணிக்கு பார்வர்டு பிளாக் சுபா சிஸ்ட், தே.மு.தி.க. கட்சியினர் 3.30க்கு, நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக். 3.45 மணிக்கு தேவரின மறுமலர்ச்சி இயக்கம், 4 மணிக்கு தேவரின பாதுகாப்பு பேரவை, 4.10க்கு ஜனநாயக பார்வர்டு பிளாக், 4.20க்கு முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், 4.30க்கு மற தமிழர் சேனை, 4.40 மணிக்கு தேவரின முன்னேற்ற பேரவை,

4.50 மணிக்கு அகில இந்திய ஜனதா கட்சி சுப்பிரமணிசாமி, 5 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் காலதாமம் இல்லாமல் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் நாளை போக்குவரத்து மாற்ற
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவிப்பார்கள். இதையொட்டி மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை (30-ந் தேதி) காலை 4 மணி முதல் ஊர்வலங்கள் முடியும்வரை நகருக்குள் லாரிகள், சரக்கு வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் தேவர் சிலைக்கு மாலையிட வரும் வாகனங்கள் தவிர மற்றவற்றுக்கு அனுமதி இல்லை. அதேபோல நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் இருந்து மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின்ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதியில் இருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், இளைஞர் விடுதி, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். தத்தனேரி பகுதியில் இருந்து கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேசன் ரோட்டில் இருந்து குலமங்கலம் ரோடு வழியாக செல்லூர் கண்மாய்க்கரை பகுதிக்கு சென்று மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும்.

ஊர்வலம் நடக்கும் சாலைகளான அண்ணா சிலை சந்திப்பு, கீழ மாசிவீதி, விளக்குத்தூண், தெற்கு மாசிவீதி, அழகர்கோவில் மெயின் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அந்த சாலைகளில் உள்ள சிறு தெருக்களில் வாகனங்களை நிறுத்தலாம். தேனி மாவட்டம் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் இருந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன் செல்வதற்கு வரும் வாகனங்கள் தேனி ரோடு வழியாக காளவாசல் வர வேண்டும்.

அதேபோல நெல்லை ரோடு வழியாக வரும் வாகனங்கள் பழங்கா நத்தம், பைபாஸ் ரோடு வழியாக காளவாசல் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து அரசரடி, புதுஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் பாலம், சிம்மக்கல், யானைக்கல், கல்பாலம் வழியாக மேளக்காரத்தெரு சென்று பனகல் ரோட்டில் அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

திண்டுக்கல் மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல் ரோடு வழியாக பாத்திமா கல்லூரி சந்திப்பு, செல்லூர், கொன்னவாயன் சாலை, பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக வந்து பனகல் ரோட்டிற்கு வந்து வாகனங்களை நிறுத்த வேண்டும். வில்லாபுரம் பகுதி வழியாக வரும் வாகனங்கள் தெற்கு வாசல் சந்திப்பு தெற்கு மாரட் வீதி, மகால் ரோடு, கீழ மாரட் வீதி வழியாக யானைக்கல் வந்து கல்பாலம் வழியாக பனகல் ரோடு சேர வேண்டும்.

மாலை அணிவித்த பிறகு அனைத்து வாகனங்களும் பனகல் ரோட்டில்இருந்து ஆவின் சந்திப்பு, குருவிக் காரன் சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக விரகனூர் சந்திப்பு சென்று மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி விழா: தொண்டர்கள் பசும்பொன் பயணம் - பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஏற்பாடு

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களது அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி விழா சிறப்பாக 28, 29 மற்றும் 30ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. பசும்பொன்னில் நேற்று ஆன்மீக விழா தொடங்கியது. விழாவில் கோவை காமாட்சி ஆதீனம் பேராசிரியர் ஏ.கோபால் கலந்து கொண்டு ஆன்மீக விழா நடத்தினர்.

100 வாகனங்கள் இன்று திங்கட்கிழமை எங்களது கட்சியின் சார்பில் தேவரின் 48-வது குருபூஜை விழா பசும்பொன்னில் அகில இந்திய தலைவர் வேலப்பநாயர், மாநில பொதுச்செயலாளர் (நானும்) தமிழ் மாநில பொறுப்பாளர் ப.முத்து மற்றம் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் மாலை 5 மணிக்கு மதுரை ரெயில்வே நிலையத்திலிருந்து 100 வாகனங்களில் புறப்பட்டு பசும்பொன் செல்கிறோம்.

திருப்புவனம் பார்த்திபனூர் மற்றும் அபிராமத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கமுதி சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன்னில் இரவு 8.30 மணி முதல் 9.00 மணியளவில் தேவர் குருபூஜை சிறப்பாக நடைபெறும். நாளை (30-ந்தேதி) காலை 8.30 மணிக்கு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு தோழர் வேலப்ப நாயருடன் நானும் மற்றும் நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தும், திருநகர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தும், ஒத்தக்கடை ராஜகம்பீரத்தில் அமரர் அய்யனன் அம்பலம் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தல், மதுரை மாநகர் நான்கு பிரிவுகளாக பிரிந்து மதுரை மாநகர் முழுவதும் கொடியேற்று விழா, அன்னதானம் விழாக்கள் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலையிலிருந்து என்னுடைய தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு ஏ.வி.பாலம், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, கான்சாமேட்டுத் தெரு வழியாக ஜான்சிராணி பூங்காவை அடைகிறது. அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நமது கட்சி சார்பில் நடை பெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்

கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் பி.டி.அரசக்குமார் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மாநில அவைத் தலைவர் ராஜபாண்டியன், துணை பொதுச்செயலாளர் நல்லமணி, மாவட்ட நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமானோர் தொடர் ஜோதி ஏந்தி வந்தனர். 

இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநிலக்குழு சார்பில் நாளை காலை 9 மணிக்கு மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்தானம் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் 100 வாகனங்களில் பசும்பொன் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் மகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு சந்தானம் தலைமையில் தமுக்கத்திலிருந்து தேவர் ஜெயந்தி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. 

இதனை தொடர்ந்து தெற்குமாசி வீதி-மேல வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

தேவர் குரு பூஜை: அன்னதானம்  வழங்க நிபந்தனைகள்


தேவர் குருபூஜை விழாவின்போது தேவர் நினைவிடத்தில் அன்னதானம் வழங்குவோருக்கு பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் அறிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 அன்னதானத்திற்கு அமைக்கப்படும் பந்தல் போன்ற இதர தாற்காலிகக் கட்டுமானங்களின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித் துறை நிர்வாகத்திற்கு கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும்.
 அன்னதானம் வழங்கும் நிர்வாகிகள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரத்தையும், சமையலர்கள், உதவியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் பெயர், முகவரி ஆகிய விவரங்களையும் ராமநாதபுரம் எஸ்.பி.க்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.
 தயாரிக்கப்பட்ட உணவை கமுதி பேரூராட்சி உணவு ஆய்வாளரின் சோதனைக்குப் பின்பே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். 
 இதை கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.பாதுகாப்பு கருதி அன்னதானம் ஏற்பாடு செய்யும் அமைப்புகள் அன்னதானம் நடைபெறும் இடத்தில் சொந்தப் பொறுப்பில் குறுவட்டத் தொலைக்காட்சிப் பெட்டி அமைத்து நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்.
 அன்னதானம் நடைபெறும் இடத்தில் தீ தடுப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை கடைப்பிடிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேவர் ஜயந்தி திருவிளக்குப் பூஜை


கமுதி-கோட்டைமேட்டில் உள்ள தேவர் நினைவு கல்லூரியில் பசும்பொன் தேவர் 150-வது ஜயந்தி மற்றும் 50-வது குருபூஜையை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கோவை-காமாட்சிபுரி ஆதீனம், குரு மகா சன்னிதானம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கே.செல்வராஜ் முன்னிலை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியர் ஆர்.முத்து ராமலிங்கம் வரவேற்றார்.
 திருவிளக்குப் பூஜையில் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் பலரும் நிகழ்ச்சியில கலந்து கொண்டனர்.
 வணிகவியல் துறை பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தேவர் ஆராய்ச்சி மையத்துக்கு அதிக நிதி ஒதுக்கக் கோரிக்கை


பசும்பொன் தேவர் ஆராய்ச்சி மையத்திற்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
 பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சனிக்கிழமை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 சாதி, மத நல்லிணக்கத்துடனும், நாட்டுப்பற்றுடனும், உறுதியான கொள்கைகளுட னும், தியாக மனப்பான்மையுடனும் பசும்பொன் தேவர் வாழ்ந்தார். மதுரை-காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேவர் ஆராய்ச்சி மையத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்தொகை மிகவும் குறைவானது. அதிகமான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 தேவர், கள்ளர், அகமுடையார் ஆகிய இனங்களை ஒருங்கிணைத்து தேவர் இனம் என்று அறிவிக்கப்படும் என்று 1995-ம் ஆண்டில் அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறி விப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது. 
 கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இனம் வாரியாக இட ஒதுக்கீடு செய்யப்படுவதுபோல, பதவி உயர்வும் இன வாரியாக வழங்கப்பட வேண்டும் என்றார்.
 ஜி.கே.மணியுடன் மாவட்டச் செயலர்கள் கிட்டு (மதுரை), தங்கராஜ் (ராமநாதபுரம் மேற்கு), சண்முகம் (ராமநாதபுரம் கிழக்கு) உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

தேவர் ஜயந்தி:  10 அமைச்சர்கள் பங்கேற்பு


கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறும் தேவர் 105-வது ஜயந்தி விழாவில் அமைச்சர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.
 விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் க.ந்நதகுமார் தலைமை வகிக்கிறார். மாவட்ட வரு வாய் அலுவலர் சோ.விஸ்வநாதன் வரவேற்கிறார். தேவர் உருவப் படத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைக்கிறார்.
 அமைச்சர்கள் எஸ்.சுந்தரராஜ், எஸ்.கோகுல இந்திரா, கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகின்றனர்.
 விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீóர செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், பி.செந்தூர் பாண்டியன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
 விழாவிற்கு ஜே.கே.ரித்தீஸ் எம்.பி., மு.முருகன் எம்.எல்.ஏ., கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் த.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

No comments: