Tuesday, October 30, 2012

THEVAR JEYANTHI NEWS

105-வது பிறந்தநாள்: சென்னையில் தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை


105-வது பிறந்தநாள்: சென்னையில் தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 105-வது பிறந்த நாளையொட்டி நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் கோதண்டராமர், தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் மகிழன்பன் லட்சுமி நாராயணன், டைரக்டர் நாஞ்சில், பி.சி.அன்பழகன், பகுதி செயலாளர் ஏ.என்.வெங்கடேசன், கவுன்சிலர்கள் எஸ்.அமீர்பாஷா, டி.சிவராஜ், புஷ்பா நகர் ஆறுமுகம், அலிகான்பஷீர், கற்பகம், நுங்கைமாறன், எம்.என்.பாஸ்கரன், ராஜஸ்ரீ வெற்றிவேந்தன், மற்றும் ஆர்.டி.சாம்சன், முன்னாள் மாவட்ட செயலாளர் புரசை கிருஷ்ணன், கவிஞர் வீரைகரீம், டி.ஈஸ்வரன், ஏ.என்.சுப்பிரமணி, வெற்றிவேந்தன், மூலக்கடை சக்தி, பாஸ்கர், ஷீலா பாஸ்கர், அண்ணா நகர் பாண்டுரங்கன். முகப்பேர் இளஞ்செழியன்.

தி.மு.க. சார்பில் தேவர் சிலைக்கு எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. உசேன், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், ஆருண் எம்.பி., முன்னாள் எம்.பி.திருநாவுக்கரசர், எம்.எல்.ஏக்கள் ரங்கராஜன், விஜயதாரணி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதைரவி, ராயபுரம் மனோ, மாநில செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், கவுன்சிலர் பி.வி.தமிழ்செல்வன், ஜி.ஆர்.வெங்கடேஷ், வில்லிவாக்கம் சுரேஷ், திலிப்குமார், தனசேகர், எல்.கே.வெங்கட், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ணரெட்டி, கமல்குமார் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பா.ம.க சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் நிர்வாகிகள் சைதை கணேசன், கே.எஸ்.இளங்கோவன், பிரபு, திருநாவுக்கரசு, சங்கரபாண்டியன், பி.ஆர்.பி.பாண்டியன், சண்முகவேல் பாண்டியன், பெரியதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

வடசென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தேவர் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாரதீய ஜனதா சார்பில் இல.கணேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், டால்பின் ஸ்ரீதர், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ரவிச்சந்திரன் மற்றும் விவேகாகனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவருடன் லட்சிய தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை, முரளி, மாவட்ட செயலாளர் எம்.எம்.ஆர்.மதன், கே.ஜி.சுரேஷ், மூசா, சங்கர், கஜேந்திரன், அனுஷ்ராஜு, செல்வம், முத்து ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

அம்பேத்கர் முன்னணி கழகம் சார்பில் பொது செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமலு மாலை அணிவித்தார்.

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அன்பழகன்-வைகோ மாலை

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அன்பழகன்-வைகோ மாலை











தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அன்பழகன் மற்றும் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை நகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேயர் ராஜன்செல்லப்பா, அவைத்தலைவர் துரைப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணைமேயர் கோபால கிருஷ்ணன், பொருளாளர் ராஜா, மண்டலத்தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், இளைஞர் அணி நிர்வாகிகள் முத்து முருகன், ஆட்டோ விஜயன், பேரவை நிர்வாகிகள் வெற்றி வேல், பாரதிமுருகன், தொழிற்சங்க நிர்வாகிகள் வக்கீல் பாலசுப்பிரமணி, ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் பசும்பொன் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், சொக்கர், நல்லுச்சாமி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன்முத்து ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கவுஸ் பாட்சா, வேலுச்சாமி, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், செல்லூர் குரும்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் தெய்வ நாயகம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் ராம்பாபு, காந்தி, சிலுவை, அன்னபூர்ணா தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஆர்.தங்கராமன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் கோகுல கிருஷ்ணன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதீய ஜனதா கட்சி யினர் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நிர்வாகிகள் சுரேந்திரன், சசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், நிர்வாகிகள் சின்னசெல்லம், ஆசைத்தம்பி, மனோகரன், பாஸ்கரசேதுபதி, மகபூப் ஜான் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில குழு சார்பில் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பொருளாளர் மகேஸ்வரன், தலைவர் நவமணி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். வல்லரசு பார்வர்டு பிளாக் சார்பில் அதன் தலைவர் அமாவாசை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி: பால் குடம், முளைப் பாரிகளுடன் ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க  தேவரின் நினைவாலயம் உள்ளது. இங்கு அவரின் குருபூஜை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-ம் நாள் குருபூஜை விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் அதிகாலை 4 மணிக்கு விசேஷ யாகசாலை பூஜைகள் மற்றும் வேள்வி வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையிலான குழுவினர் வேள்வி பூஜையை நடத்தினர். தொடர்ந்து தேவர் நினைவாலயத்திற்கு பலரும் வந்து மலர் அஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினர். அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சந்தானம் தலைமையில் தேவர் நினைவிடத்தில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தேவர் குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். கடையனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன், பழுவூர் கோபால், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏராளமான இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்து, தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் அணி வகுத்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் அணி தலைவர் ரவிச்சந்திர வாண்டையார், பொதுச்செயலாளர் செல்வ ராஜ், பொருளாளர் கோவிந்தசாமி, ஆட்சி மன்ற குழு செயலாளர் ரவீந்திரன், மாநில இணை தலைவர் ஆறுமுக நட்டார், துணைத்தலைவர் வி.கே.ராமசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் முத்து, சிதம்பரம், மதியழகன், கோவிலாங்குளம் ஜோதி முத்துராமலிங்கம் உள்பட ஏராளமான மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குருபூஜையை முன்னிட்டு மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் நேற்று இரவு முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். காலையிலும் அன்னதானம் நீடிக்க, சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காலையிலேயே தேவர் நினைவாலயம் வந்து மலர் அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன் (ராமநாதபுரம்), சண்முகசுந்தரம் (விருதுநகர்), மாநில நிர்வாகிகள் கராத்தே பழனிச்சாமி, ராமநாதபுரம் சுரேஷ் மற்றும் கட்சியினர் அவருடன் வந்திருந்தனர்.
தொடர்ந்து நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
1971-ம் ஆண்டு முதல் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறேன். இடையில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், அப்போது மட்டும் வர முடியவில்லை. தற்போது 37-வது ஆண்டாக அஞ்சலி செலுத்தி உள்ளேன். அனைத்து சாதி சமயத் தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் சார்பில் 10 அமைச்சர்கள், தேவர் நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், சுந்தர்ராஜன், செந்தூர் பாண்டியன், கோகுல இந்திரா, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டன. குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நந்தனத்தில் கொட்டும் மழையில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 105-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

சிலைக்கு கீழே தேவரின் முழு உருவப்படம் மலர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. காலையில் மழை பெய்தாலும் சிலைக்கு மாலை அணிவிக்க ஏராளமானோர் திரண்டு வந்தனர். 

காலை 10.45 மணிக்கு கொட்டும் மழையிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு வந்தார். தேவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு திரண்டு நின்ற கூட்டத்தினரைப் பார்த்து கையசைத்தார். 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், பழனியப்பன், தங்கமணி, வளர்மதி, கே.டி.பச்சைமால், விஜய், செந்தில் பாலாஜி, ஆனந்தன், மாதவரம் மூர்த்தி, மோகன், எடப்பாடி பழனிச்சாமி, சம்பத், ஜெயபால், பச்சைமால், முக்கூர் சுப்பிரமணியன், துணை சபாநாகயர் பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், எம்.பி.க்கள் தம்பித்துரை, இளவரசன், பாலகங்கா, எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கலைராஜன், செந்தமிழன், கே.பி.கந்தன் ராஜலட்சுமி, வேலுமணி, வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், நடிகர் ராமராஜன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தியை முன்னிட்டு, மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து அவரது சிலைக்கு திங்கள்கிழமை வழிபாடு நடத்தினர்.
 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திலுள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 இதையடுத்து, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் மாலை அணிவிக்கின்றனர். அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் சார்பில், மதுரையில் ஆயிரக்கணக்கானோர் தேவர் சிலைக்கு திங்கள்கிழமை ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
 சோலையழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், காமராஜர்புரம், கீரைத்துறை, வில்லாபுரம், பொன்னகரம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து தேவர் சிலை முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.
 மேலும், ஏராளமானோர் பால்குடம் சுமந்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் தொடர் ஜோதியை நடைபயணமாகக் கொண்டு வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 தேவர் சிலை முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதனால் கோரிப்பாளையம் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. ஜயந்தியை முன்னிட்டு, தேவர் சிலை பகுதியில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டிருந்தனர்.
 சிலைகளுக்குப் பாதுகாப்பு: மதுரை நகரில் தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், அழகர்கோவில் சாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிலைகளைச் சுற்றிலும் போலீஸôரின் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மருதுபாண்டியர் நினைவு  மாட்டு வண்டிப்பந்தயம்


திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், தேவர் ஜயந்தியையொட்டியும் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
 திருப்பத்தூர்-சிங்கம்புணரி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்திற்கு அகமுடையார் சங்கத் துணைத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். போட்டியை திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரசேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் பெரியமாடு பிரிவில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் மதுரை அவனியாபுரம் பசும்பொன் முதலிடத்தையும், மேலமடை சீமான்ராஜா 2-ம் இடத்தையும், மாம்பட்டி ஆர்.வி.கே. 3-ம் இடத்தையும் பிடித்தன. 
 சின்ன மாடு பிரிவில் 22 ஜோடிகள் கலந்து கொண்டன. அதில் மாவூர் கோபிகிருஷ்ணன் முதல் பரிசையும், கிலுகிலுப்பைப்பட்டி சோணைமுத்து 2-ம் பரிசையும், புதுவாக்காடு நல்லமுகமது 3-ம் பரிசையும் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

பா.பி. செயற்குழு கூட்டம்


அகில இந்திய பார்வர்டு பிளாக் (தினகரன் பிரிவு) செயற்குழு கூட்டம் மதுரையில் மாநில பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், “திருப்பாச்சேத்தி அருகே நடந்த வன்முறையில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ ஆல்வின் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பது, ம் தேதி (இன்று) தேவர் ஜெயந்தி விழாவை, அமைதியான முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லா மல் நடத்த அரசுக்கு ஒத்துழைப்பு தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


































No comments: