Monday, March 30, 2020

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

Image may contain: 1 person

#ரிபெல் #முத்துராமலிங்க #சேதுபதி
# இன்று_மார்ச்_30 #260_வது_பிறந்த_தினம்

வாழ்ந்த காலம் 49 ஆண்டுகள்.

சிறையில் இருந்த காலம் 25 ஆண்டுகள்

ஆட்சி செய்தது 14 ஆண்டு காலம்.

பத்து வயதில் சிறைப்பட்டவர்.

மதுரை பெரியாறு அணையை கட்ட முதலில் திட்டம் வகுத்தவர்.

நாடு முழுதும் ஒரே நில அளவை முறையை முதலில் அமல்படுத்தியவர்.

கல்வியின் தேவை உணர்ந்து பல கல்வி நிலையங்களை குறிப்பாக ஸ்வார்ட்ஸ் என்னும் புகழ்பெற்ற பள்ளிகளை தன் நாட்டிற்குள் அனுமதித்து அதற்கு மாதாமாதம் ஒரு தொகையை ஒதுக்கியவர்.

அன்னிய நாட்டு பணங்களை மாற்றும் வசதியை (Money change & Transfer ) இந்தியாவிலேயே முதலில் ஏற்படுத்தியவர்.

கொல்கத்தா, பாம்பே,திருவாங்கூர், பினாங்கு, டச்சு மற்றும் பல நாடுகளில் தன்னுடைய. பிரதிநிதிகளின் அலுவலகத்தை அமைத்து ஆங்கிலேயர்களே வியக்கும் அளவிற்கு வணிகத்தில் ஈடுபட்டவர்.

வறண்ட பூமிக்கெனவும் விளைச்சல் பூமிக்கெனவும் தனித்தனியாய இரட்டை வரிக்கொள்கையை அமல்படுத்தியவர்.

விளைச்சலை முழுதும் ஒப்படைக்காமல் விளைச்சலில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் வரியை பணமாக வாஙகியவர்.

நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்களை,ராம்நாடு பெரிய கண்மாயை சீரமைத்தவர்.

ஆங்கிலேயன் ஆதிக்கம் பெற்ற தன் நாட்டிலேயே ஆங்கிலேயனிடம் சுங்கவரி வசூலித்தவர்.

நவாப்களை நாவடைக்க வைத்தவர்.

சிவகங்கை சீமையை மறுபடியும் சேதுநாட்டுடன் இணைக்க பாடுபட்டவர். தான் ஆட்சி செய்த 14 ஆண்டுகளும் ஒரு காசு அயலாருக்கு வரி கொடுக்காதவர்.

ஆங்கிலேயனின் கப்பலுக்கு சுங்கவரி கேட்டு சிறைபிடித்து வரியை வசூலித்ததின் விளைவு சூழ்ச்சியால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

20 வயதில் சிறையிலிருந்து வெளிவந்து 35வது வயதில் மீண்டும் சிறை சென்றான். 49 வயதுவரை சிறையிலேயே இருந்து தன் உயிர்நீத்தார்.

ஆனால் சாகும்வரை ஒரு பைசா வரியாய் எவருக்கும் கொடுக்காதவர். இவருடன் நிறைவுற்றது சேதுநாட்டின் சுதந்திரம்.

அந்த திமிருக்கு சொந்தக்காரர்.... மார்தட்டி சொல்வேன்...எம் முப்பாட்டன்...

#ரிபெல்_முத்துராமலிங்க_சேதுபதி

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படுவது இருவருக்கு மட்டுமே. ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மற்றொருவர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 🙏🙏

No comments: