K4 அண்ணாநகர் - சென்னை போலிஸ் ஸ்டேஷன் - டிராபிக் எஸ்.ஐ லட்சுமணன் பெருமாள் கூட்டணியின் அட்டூழியம் மக்கள் பார்வைக்கு.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெளியிட விரும்பினேன். தொழில் பணிச்சுமை நேரமில்லை. ஊடகங்கள் செய்தி வெளியிட தயாராகிவிட்ட நிலையில் காரின் புகைப்படங்கள் இல்லாமல் தாமதமானது. இன்று டாட்டா நிறுவனத்தாரே புகைப்படங்கள் எடுத்து அனுப்பியதால் ஆதாரப்பூர்வமாக பதிவிட விரும்புகிறேன்.
மிகப்பெரிய திருட்டுத்தனம் அரங்கேறியதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் அளவு என்ற போராட்டம் கொரோனா முன்னிட்டு முகநூலில் தொடங்குகிறது
தனியார் மருத்துவர் செய்த தவறுக்கு நியாயம் கேட்கப்போய் அது கிடைக்கவில்லை. அதனால் அங்கிகாரம் இல்லாத மருத்துவமனையை அடித்து உடைத்தேன். ஆனால் அன்றைய மணல் திருடர்கள் கூட்டணி + கலப்பட எண்ணெய் நிறுவன கூலி உதயசூரியன் எனும் டிஎஸ்பி பிசிஆர் வழக்கில் கைதுசெய்து நான் 2 மாதமும் எனது கார் 7 மாதம் சிறைபட்டது.
அதிலிருந்து மீட்டு வந்த மறுநாள் என் நண்பர் பாலமுருகன் சென்னையில் வாகனம் ஓட்டிச்செல்லும்போது ஏற்பட்ட காயமில்லாத, சேதமில்லாத விபத்தை காரணம்காட்டி இப்படி ஒரு அநியாயம் செய்துவிட்டார் எஸ்.ஐ பெருமாள்.
சிக்னலை மீறி பைக்கில் வந்த பையன் மோதி கீழே சாய்ந்தான். அவனே எழுந்து போயிட்டான். இதை ஒரு காரணம் காட்டி 100 க்கு போன் வந்ததாக தியேட்டர் வாசலில் நின்ற காரை தூக்கிட்டு போனிங்க..
விபத்துன்னு வழக்குப் போட உடையாத முகப்பு விளக்கினையும் உடைத்தாச்சு. தூக்கிட்டு வந்த வண்டிக்கு வாடகை என்று என்கிட்டயே 3500 வாங்கியாச்சு.
வாகன ஓட்டுனர் ஆவணங்கள் பார்த்துவிட்டு சட்டத்திலேயே இடமில்லாத ஒரு நடைமுறையை கூறி ஓட்டுனருக்கு ஸ்டேசன் பெயிலுக்கு ரூ.5000 புடுங்கியாச்சு.
அடுத்து பிரேக் டெஸ்ட் எடுக்க பெரம்பூர் போனா அங்கே நம்ம திருநெல்வேலி ஆர்டிஓ. உண்மையை சொன்னோம் எதுவும் எதிர்பார்க்காமல் வேகமாக வாகனத்தை ஓட்டியதுக்கு நீதிமன்றத்தில் அபராதம் கட்டுங்கனு மனுசன் முடித்து அனுப்பிட்டாரு.
அப்பயாவது கட்டவச்சிட்டு விட்டிங்களாடா... படுபாவிகளா... ஆர்டிஓ நேரடியா கேட்கமாட்டாரு ஏட்டயா மூலமாதான் போகும்னு சொல்லி ஸ்டேசன்ல இருக்கும் எல்லாரையும் கவனிக்க சொன்னிங்களே... அப்போதாவது கோர்ட்ல காரை ஒப்படைத்து எவ்வளவு அபராதம் காட்டனுமோ அதை கட்டவைத்து உங்க எச்சை புத்தியை அடுத்ததாக பார்த்திருக்கலாம் அல்லவா?
வாழ்க்கையில் நமக்கான வேலை நிறையா இருக்குனு நான் எடுத்த பொறுமை முடிவு தவறானதோ?
அந்த காரில் எது உறுத்தியது புரியவில்லை. பூலித்தேவர் விழாவிற்கு போய் திரும்பும்போது கட்டியிருந்த தேவர் பேரவை கொடியா? விதைத்துக்கொண்டே இரு என்ற நம்மாழ்வார் வாசகமா? உனக்கு சோறுபோடும் உழவன் வாசகமா? துணிவே துணை வாசகமா?
இல்ல பல லட்சம் மதிப்புள்ள காரில் நல்லா கறவை செய்யலாம் என்ற பிச்சைக்கார புத்தியா?
இல்ல பல லட்சம் மதிப்புள்ள காரில் நல்லா கறவை செய்யலாம் என்ற பிச்சைக்கார புத்தியா?
காரை ஏன் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை என்று 5 மாதம் கழித்து கேட்டால் அடிபட்டவனுக்கு டாக்டர் சர்டிபிகேட் இல்லையாம்.கொடுக்க முடியலனு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிடுகிறார். அடிபட்டாதானே டாக்டர் கொடுப்பார்? உங்க அஞ்சுபத்து கொள்ளைக்கு அவர் எப்படி கூட்டணி வருவார்?
No comments:
Post a Comment