மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய ஆறாவது படிக்கும் மாணவி கேட்ட கேள்விக்கு சரியான தகவல் இல்லை என்ற பதிலை மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தில் உள்ள தகவல் படி, காந்திக்கு மாகாத்மா என்ற பட்டம் எப்படி வந்தது என்றால், 1944-ல் சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ், காந்தி குறித்து வானொலியில் பேசும் போது, மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் அது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காந்தி படுகொலை செய்யப்படும்போது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் பேசுகையில் , “தேச தந்தை நம்மோடு இல்லை... “ என்று அறிவித்தார் என்ற செய்தி இணையதளங்களில் காண முடிகிறது. இருப்பினும் இதுகுறித்து திரு நவமணி அவர்களிடம் பேசியபோது " மகாத்மா என்று முதன் முதலில் பயன்படுத்தியது நேதாஜி அவர்களே என்றும் "தேச தந்தை" என்ற வார்த்தை முதன் முதலில் நேரு கூறவில்லை அதுவும் நேதாஜி அவர்களால் கூறப்பட்டதே என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment