பெட்ரோல், விலை கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு ரூ.2.50 வீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
இதனால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்ட பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை 110 டாலருக்கு விற்பதால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகும் என்று இந்தியன் ஆயில் கழகம் கூறி உள்ளது.
தற்போது இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4.50 இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது. டீசலுக்கு ரூ.15.79, மண்எண்ணை விற்பனையில் ரூ.24.74 மற்றும் சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.297.80 இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
எனவே பெட்ரோலியம் பொருட்கள் விலையை கணிசமாக உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடத்தை விதிகள் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி முடிவுக்கு வருகிறது.
அதன் பிறகு உடனடியாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படும் என்று இந்தியன் ஆயில் கழக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment