இலங்கை போர் முடிவு ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதை அடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியதாவது:-
ஐ.நா. அறிக்கை அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து இதுவரை ஐ.நா. சபை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஐ.நா. குழுவின் அறிக்கை சம்பந்தமான இறுதி முடிவை பாதுகாப்பு சபை எடுக்கும்.
இதற்காக ஐ.நா. அறிக்கை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் வழங்கப்படும். இலங்கை மீது உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நிரந்தர உறுப்பினர்களும், இந்தியா உள்ளிட்ட 10 தற்காலிக உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நாடுகளின் இலங்கைக்கு எதிராக அதிக நாடுகள் வாக்களித்தால் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment