Wednesday, April 13, 2011

தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது; 75 சதவீத வாக்குப்பதிவு?

சென்னை; அடுத்து ஆளப்போவது யார்? என்பதற்கான தீர்ப்பை தமிழக வாக்காளர்கள் எழுதி முடித்துவிட்டனர். தீர்ப்பு மே 13-ம் தேதி வெளியாக உள்ளது. காலை முதல் மாலை 5 மணி வரை நடைபற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவில் 75 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதாக தெரிகிறது.

234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்கு பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. தாமதமாக தொடங்கிய சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இளம் வாக்காளர்கள் அதிக அளவு ஓட்டுப்போட்டுள்ளனர்.
மதியம் 4 மணிக்கு பின்னர் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. சராசரியாக 75சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தெரியவருகிறது. வாக்குப்பதிவு முடியும் நேரமான 5 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே வாக்கு பதிவு சதவீதத்தின் இறுதி கட்ட நிலவரம் இரவே தெரியவரும். சில இடங்களில் வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு போதுமான பயிற்சி இல்லாததால் ஓட்டுப்பதிவு தாமதம் ஆனது.

வாக்கு எண்ணிக்கை

வாக்குபதிவு முடிந்ததையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்சிகளின் ஏஜென்ட்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு இன்று இரவே கொண்டு செல்லப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அவை வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக மக்கள் எழுதியுள்ள தீர்ப்புக்காக அரசியல்வாதிகள் மற்றும் இன்றி அனைவருமே காத்திருக்கின்றனர்.

No comments: