Sunday, April 24, 2011

போர்க் குற்ற அறிக்கையை வெளியிட வேண்டாம் ; ஐ.நா.விடம் இலங்கை கெஞ்சல்

கொழும்பு; இலங்கை இறுதிப்போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை அண்மையில் ஐ.நா.விடம் அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அறிக்கை வெளியாக உள்ள நிலையில் இலங்கை அரசுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.
அறிக்கை வெளிவந்தால் அது போர்குற்றத்தில் இருந்து தப்ப முடியாது என்று தெரிகிறது. எனவே அறிக்கையை எப்படியாவது தடுத்துவிடலாம் என நினைத்தது. ஆனால் அறிக்கை வருவதற்கு முன்பே அதன்தகவல்கள் கசிந்துவிட்டன. ஆகவே இப்போது என்ன செய்வது என இலங்கை அரசு கையை பிசைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழர் பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டாம். அறிக்கை தயாரித்த குழுவானது முறையான ஐ.நா. குழு அல்ல. அறிக்கை தயாரிக்க அதீத முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இறுதி போரின் போது அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. அறிக்கை காரணமாக இந்தியாவுக்கும் பிரச்னை ஏற்படலாம் என்று தெரிகிறது

No comments: