நடிகர், இயக்குனர், தமிழ் உணர்வாளர், கட்சி ஒருங்கிணைப்பாளர் என பல முகங்களை கொண்ட நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரகசிய திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமணம் செய்வதாக கூறி வாழ்ந்து விட்டு இப்போது ஏமாற்றுகிறார் என கொஞ்ச நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை விஜயலட்சுமி இயக்குனர் சீமான் மீது புகார் கூறியது நினைவுக்கு வரலாம். இதுபோன்ற திடீர் திருமண புரளிகள் இயக்குனர் சீமானை சுற்றி பேசப்படுவது வழக்கமான ஒன்று என்றாலும் இந்தமுறை வெளியான தகவலை சீமான் தரப்பும் மறுக்காமல் அமைதி காத்து வருகிறார்.
முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியைத்தான் சீமான் ரகசிய திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன்&மதிவதனி திருமணம் அக்டோபர் முதல் தேதியில் நடந்தது. அதை நினைவுபடுத்தும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர் 1ம்தேதி சீமானும், கயல்விழியும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த திருமணத்தை சீமான் ஏன் ரகசியமாக மறைத்து வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம், அவருக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment