விஜய் சேதுபதி தன் கலைசேவையை “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் ஆரம்பித்து “பீட்சா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “சூதுகவ்வும்” மற்றும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்று அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து கொண்டிருக்கிறார்.
இவருடைய அடுத்த படமான “ரம்மி” வெகு வேகமாக வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. “ரம்மி” திரைபடத்தில் விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இனிகோ பிரபாகரனுடன் இணைந்து நடித்துள்ளார். மற்றும் ஐஸ்வர்யா, காயத்ரி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தை புதிய இயகுனரான பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். JSK பிலிம்ஸ் சதிஷ்குமார் தயாரிப்பில் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
வருகிற 27ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிட முடிவு செய்து இருந்தனர். முன்னதாக 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக JSK பிலிம்ஸ்-ன் மதயானை கூட்டம் வெளியாக இருப்பதால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாக வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் 27ம் தேதி வெளியிட்டால் பொங்கல் படங்கள் காரணமாக குறுகிய காலத்திற்கு தான் திரையிட முடியும், ஒரு நல்ல படம் குறைந்த நாட்கள் ஓடுவது ஆரோக்கியமானது அல்ல. அதனால் படவெளியீட்டை கொஞ்சம் தள்ளிபோட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதையொட்டி, படத்தை ஜனவரி 24ம் தேதி வெளியீட முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
பொதுவாகவே விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment