மக்களவைத் தேர்தலில் தேசிய சமுதாயக் கூட்டமைப்பில், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் தேசிய சமுதாயக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொ.மு.க. தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாடாளுமன்றத் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய 54 அமைப்புகள் ஒன்றிணைந்து, சமீபத்தில் சேலத்தில் தொடங்கப்பட்ட தேசிய சமுதாயக் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் 22 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.
போட்டியிடும் தொகுதிகளின் விவரம்: 1. திருப்பூர், 2. ஈரோடு, 3.சேலம், 4.தருமபுரி, 5.கிருஷ்ணகிரி, 6.கள்ளக்குறிச்சி, 7.நாமக்கல், 8.கரூர், 9.திண்டுக்கல், 10.பொள்ளாச்சி, 11.கோவை, 12.மதுரை, 13.ராமநாதபுரம், 14.விருதுநகர், 15.தேனி, 16.சிவகங்கை, 17.திருநெல்வேலி, 18.திருச்சி, 19.தஞ்சாவூர், 20.மயிலாடுதுறை, 21.மயிலாடுதுறை, 21.தென்சென்னை, 22.வடசென்னை ஆகிய 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம்:
1. திருப்பூர் - பொங்கலூர் இரா.மணிகண்டன். 2. ஈரோடு - காங்கயம் எம்.தங்கவேல். 3. கோவை - நேரு நகர் நந்து. 4. பொள்ளாச்சி - ஆர்.கோவிந்தசாமி. 5. தருமபுரி - பெ.சரவணன். 6. ராமநாதபுரம் - முகவை எஸ்.கணேசத் தேவர்.
.
No comments:
Post a Comment