சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து விளக்க உரை நிகழ்த்தினார்.
பொருளாளர் கழுவன், தலைமை நிலைய செயலாளர் குருசாமி, மாநில துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி பாண்டியன், இளைஞரணி செயலாளர் லிங்கம், மாநில அமைப்புச் செயலாளர் இரா. பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர் சேதுராமன் பேசியதாவது:–
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்வது தொடர் சம்பவமாகி விட்டது. இதை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது.
கேரளாவில் மீனவர்களை தாக்கிய இத்தாலிகாரர்களை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் தமிழக மீனவர்களை தாக்கும் சிங்கள படைக்கு இந்தியாவில் மத்திய அரசு பயிற்சி கொடுக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்?
தமிழகத்துக்கு போதுமான நிதியை தராமல் மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சிக்கிறது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு டாக்டர் சேது ராமன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் பெரியதுரை, முத்துபெருமாள், நாதன், சுப்பையா, திருநாவுக்கரசு, சங்கரபாண்டியன், சண்முகவேல் பாண்டியன், அங்கப்பன், கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன், ரவிராஜ், வன்னியராஜ், செல்வம், கருப்பசாமி, ராமசாமி, கணேசன் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment