மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக்
கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
சிறந்த மதிய உணவகம்..!
1- சந்திரன் மெஸ், தல்லாகுளம்( அயிரைமீன் குழம்பு, நெய்மீன்வறுவல் நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ், தல்லாகுளம்( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ், தல்லாகுளம்( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )
4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண்( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல்- மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை -புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் -மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி மட்டன் பிரியாணி
சிறந்த மாலை நேர உணவகம்..!
1- கோனார் மெஸ், சிம்மக்கல்( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு, மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )
2- குமார் மெஸ், தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார் ( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம்( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால் கோரிப்பாளையம்( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை பீபீ குளம் ( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )
சிறந்த மாலை உணவகங்கள்..!
ஜானகிராமன் மெஸ்-திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன்( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால்ரோடு ( கிங் பரோட்டா,பட்டர்சிக்கன் )
பஞ்சாபி தாபா -தல்லாகுளம் ( பட்டர்நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை -ஆவின் சிக்னல்( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை-அண்ணா பஸ்ஸ்டாண்ட் ( பகலில்கறிக்கடை,இரவில்இட்லி கடை )
சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!
கணேஷ் மெஸ்,மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள்)
எந்நேரமும் சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல்,முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )
இவை அனைத்தையும் விட
மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -
முருகன் இட்லி கடை,இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்( இட்லி,இட்லி, இட்லி...உலகின் மிகச்சிறந்த இட்லி )
மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -
திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )
சங்கர் காபி,அண்ணா பஸ்ஸ்டாண்ட்- உழுந்தவடை
ஐயப்பா தோசை கடை,இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் ,ஆர்த்தி ஹோட்டல்ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் - பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர்தோசை....
விசாலம் காபி-கோரிப்பாளையம் ,தல்லாகுளம்.- காபி,
"கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,மதுரா கோட்ஸ்
மேம்பாலம் கீழே -இளநீர் சர்பத்.
இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்-ஜில்ஜில் ஜிகர்தண்டா.
மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க
மதுரை உணவின்
சுவை உலகெங்கும் புகழ் பரப்புவோம்...
Thanx : Veeram Velanja Madurai
No comments:
Post a Comment