யார் இந்த ஆண்டித்தேவர்...?
* சேடப்பட்டிக்கு அருகிலுள்ள காளப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.
* திரு P.K.மூக்கையாத் தேவருக்கு பிறகு,
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றியவர்.
* M.G.R ஆட்சிக்காலத்தில் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசி முதலமைச்சர் M.G.R-யையே அச்சமூட்டக்கூடியவர்.
* எந்த சூழ்நிலையிலும்,
எவருக்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுபவர்.
* சிறந்த வழக்கறிஞர்.
* தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமைப்பெற்று விளங்கியவர்.
மிகச்சிறந்த பேச்சாளர்.
* வலிமையான உடலையும்,
உறுதியான மனநிலையையும் கொண்ட மனிதர்.
* தலைமை பண்பிற்கு தேவையான அனைத்து குணநலன்களையும் தன்னகத்தே கொண்டவர்.
* மிகச்சிறந்த அரசியல்வாதி.
இவரது துணிச்சலுக்கு ஒரு உதாரணம்;
திரு M.G.R முதலமைச்சராக இருந்த காலத்தில்,
பசும்பொன் தேவரின் வரலாறு தமிழ் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது.
மூன்று கல்வி ஆண்டுகளுக்கு பிறகு அந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்யும்போது, பசும்பொன் தேவரின் வரலாறு தவறுதலாக விடுபட்டுப்போனது.
இந்த தகவல் திரு எஸ்.ஆண்டித்தேவருக்கு தெரிந்ததும்,
உடனடியாக முதலமைச்சர் M.G.R-யை தொடர்பு கொண்டு "அந்த பாடப் புத்தகங்களில் பசும்பொன் தேவரது வரலாற்றை இணைக்க வேண்டும்" என்று கேட்கிறார்.
அதற்கு M.G.R,
"புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுவிட்டது. இனிமேல் அவற்றில் திருத்தம் செய்து மீண்டும் அச்சிட்டால் அரசுக்கு அதிக செலவு ஆகும். எனவே மறுபதிப்பு வரும்போது தேவரது வரலாற்றை இணைத்து விடுகிறோம்" என்கிறார்.
அதற்கு எஸ்.ஆண்டித்தேவர் M.G.R-டம் பதில் சொல்கிறார்,
"தேவரது வரலாறு புத்தகத்தில் இடம்பெறாத தகவல் தெரிந்தால், திருச்சிக்கு தெற்கேயுள்ள அனைத்து பாலங்களும் இடித்து தள்ளப்படும்.
பிறகு அந்த பாலங்களையெல்லாம் கட்டுவதற்கு உங்கள் அரசு செலவழிக்கும் தொகையைவிட, பாடப்புத்தகங்களை மீண்டும் அச்சிடுவதற்கு ஆகும் செலவு மிக மிகக்குறைவு" என்றார்.
அதன்பிறகு,
அதே கல்வியாண்டில் தேவரது வரலாற்றை இணைத்து அனைத்து புத்தகங்களையும் மீண்டும் அச்சிட்டு வெளியிட்டார் அன்றைய முதல்வர் M.G.R..!
# இன்றைய அரசியலில்,
திரு எஸ்.ஆண்டித்தேவரை போல எவராவது ஒருவர் செயல்பட முடியுமா....????
(தகவல் தந்த - திரு V.S.நவமணி அவர்களுக்கு நன்றி)
- சா.வீரமுத்து விஜயதேவர்
சின்னக்குமுளை
தஞ்சாவூர் - மாவட்டம் —
No comments:
Post a Comment