இந்தியாவில் தற்போது 40 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த 2007-ம் ஆண்டு தினமும் சராசரியாக 465 நிமிடங்கள் வரை செல்போன்களில் பேசி வந்தனர். தற்போது தினமும் சராசரியாக 350 நிமிடங்கள் பேசுகிறார்கள்.
செல்போன் நிறுவனங்களிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக கட்டணம் வெகுவாக குறைந்தது. கடந்த சில மாதங்களாக செல்போன் நிறுவனங்களுக்கு போதுமான அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதில் சில நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதை சரிக்கட்ட இந்த ஆண்டு செல்போன் நிறுவனங்கள் 30 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. வோடோபோன் நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் உள்ள “போஸ்ட்-பெய்டு” வாடிக்கையாளர்களிடம் 20 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியது. விரைவில் இந்த கட்டண உயர்வை மற்ற பகுதிகளிலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதே போல் ஏர்டெல், யூனினார், ஏர்செல், ரிலையன்ஸ், டொகோமோ போன்ற செல்போன்நிறுவனங்கள் பிரீபெய்டு வாடிக்கையாளர்களிடம் கட்டண மாக நிமிடத்திற்கு 72 பைசா வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது 60 பைசாவாக உள்ளது. எஸ்.டி.டி. கட்டணம் தற்போது நிமிடத்திற்கு 60 பைசாவாக உள்ளது. அதை 90 பைசாவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சில நிறுவனங்கள் நொடிக்கு ஒரு பைசா வீதம் வசூலிக்கின்றன. அவை இனி நொடிக்கு 1.5 பைசாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment