ஊழல் தடுப்பு மற்றும் சொத்து பறிமுதல் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் கலந்து கொண்டு சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங் பேசியதாவது:-
வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களில் இந்தியர்கள் தான் பெருமளவில் உள்ளனர். இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் இருக்கும். அதாவது இந்திய ரூபாய் கணக்கின்படி ரூ. 24.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.
சுவிஸ் வங்கியில் உள்ள வைப்புத் தொகையாளர்களில் இந்தியர்களே அதிகம். சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், மது கோடா உள்ளிட்ட ஊழல்களின் மூலம் பதுக்கப்பட்ட கருப்பு பணம் துபாய், சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளின் வழியாக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வங்கிகளில் பரிவர்த்தனைகளுக்கு எந்த வரம்பும் கிடையது. ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு சில மணி நேரங்களில் பணமாற்றம் நடைபெறுகிறது. இது குற்றவாளிகளுக்ச்கு மிகவும் சாதகமாக உள்ளது.
மொரிஷியஸ், சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெய்ன், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் மற்றும் தகவல்களை சேகரித்து வருகிறோம். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு குறைவாகவே உள்ளது என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment