தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடந்த ஜனவரி 31 ஆம் தேதி சட்டமன்ற உரையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பிப்ரவரி 4 ஆம் தேதி புயல் தாக்கிய மாவட்ட மக்களுக்கான உதவிகளை அறிவிக்க இருப்பதாக கூறியிருந்தார் .அதன்படி இன்று அவர் அந்த உதவிகளை அறிவித்தார். மற்றும் மேலும் பல திட்டங்களையும் இன்று அவர் தன் உரையில் அறிவித்தார்.
அதன்படி, புயல் தாக்கிய மாவட்டங்களில் முந்திரி, பலா பயிர்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவை அரசே ஏற்கும் என்றும், அப்பகுதி 1 இலட்சத்து 10,000 உழவர்களுக்கு 790 கோடி உதவித் தொகுப்பு அளிக்கப்படும் என்றும் கூறிய அவர், அப்பகுதியில் உள்ள அனைத்து உழவர்களுக்கும் நில வரி நீக்கப்படும் என்றும் கூறினார்.
மற்ற திட்டங்களாக, 2013 ஆம் ஆண்டு நடுவில் தமிழ்நாட்டில் மின்வெட்டு முழுமையாக நீங்கும் எனவும் வரும் ஜூன் மாதத்திற்குள் 1950 மெகாவாட் மின் உருவாக்கம் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 600 மெகாவாட் மின் உருவாக்கம் கிடைக்கும் என்றும் கூறினார்.
மேலும் கூடங்குள மக்களின் அச்சம் பற்றி அறிய மாநில அரசின் வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment