மதுரை : ஒரு சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் முக்குலத்தோர் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவரோடு பரமக்குடி இம்மானுவேல் பேரவையினர் சந்திப்பு நடந்திருக்கின்றது. அந்த சந்திப்பில் " நாங்கள் பசும்பொன் தேவரின் சிலையை பரமக்குடி பகுதியில் வைத்து வழிபட ஏற்பாடு செய்கின்றோம் எனவும் , நீங்கள் அம்பேத்கர் சிலையை மதுரைப் பகுதியில் வைக்க ஏற்பாடு செய்ய
வேண்டும் " எனவும் ஒரு கோரிக்கையை வைத்ததாக தகவல் கிடைத்தது. ஆனால் அதை என்னால் செய்ய இயலாது என்று பட்டென்று பேசி அனுப்பி விட்டாராம் மதுரை முக்குலத்தோர் கட்சித் தலைவர்.
நாங்கள் சாதியை மறந்து சமத்துவம் காண முயற்சி செய்வதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சாதியில் விடாப்பிடியாக இருக்கின்றார்கள் என்ற கருத்து அவர்கள் பேரவை தொடர்பானவர்களிடம் பரவிக்கிடக்கிறது .
" நான் புளி தருகிறேன் , நீ மிளகாய் கொடு என்ற பண்ட மாற்று முறைபோல இப்போது இந்த சிலை விவகாரத்தை கொண்டு வருகின்றார்கள். எக்குலமும், எல்லா மதத்தினரும் போற்றி பாராட்டி வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக யார் வேண்டுமானாலும் பாதுகாப்பான முறையில் சிலைகளை வைப்பதில் நாங்கள் தலையிடப் போவதில்லை. ஆனால் அதற்காக நாங்கள் இதை செய்யும் பொழுது நீங்கள் அதை செய்ய வேண்டும் என்பது பிரதிபலன் கருதி ஒரு நல்ல காரியம் செய்தலை விட செய்யாதிருத்தல் சிறப்பு" என்று மதுரை முக்குலத்தோர் அமைப்பின் நிர்வாகிகளிடையே பேச்சு அடிபடுகிறது.
எப்படியோ, தேவரின் புகழ் அறிந்து , அவரின் தெய்வீக சக்தி அறிந்து அவரின் ஆசிர்வாதத்தில் இந்த உலகம் பலனடைய விரும்புவோர் , இல்ல வழிபாட்டினாலும் , கோவில் கட்டி வழிபடுதலினாலும் தனது விருப்பத்தை நிறைவேற்றுதல் என்பது வரவேற்கத் தக்கதே!
THANX : DEVARTV.COM
No comments:
Post a Comment