கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடைய லட்சக்கணக்கான மாணவர்கள் மகிழும் வகையில், நெட் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெட் தேர்வானது 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
முதல் பிரிவு தேர்வில், கேள்வித்தாளில் Teaching aptitude, Research methodology, Maths & Reasoning abilities and Policy & institutions
போன்ற அம்சங்களின் அடிப்படையில் Objective type கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் பிரிவு தேர்வில், கேள்வித்தாளில், அவரவர் சம்பந்தப்பட்ட பாடம் தொடர்பாக Objective type கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
மூன்றாம் பிரிவு தேர்வில், கேள்வித்தாளில், விரிவாக விடையளிக்கும்(Descriptive type) வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
தற்போதைய மாற்றம்
ஆனால் இந்த மூன்றாம் பிரிவு தேர்வில்தான் இந்தாண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் கேள்வித்தாளில், இனிமேல் விரிவாக விடையளிக்கும்(Descriptive type) கேள்விகளுக்குப் பதிலாக, Objective type கேள்விகளே கேட்கப்படும்.
புதிய நெட் தேர்வு முறையின் தெளிவான விபரம்
முதல் தாள்
60 Objective type கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் 50 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வீதம்(50x2) மொத்தம் 100 மதிப்பெண்கள். இதற்கு ஒதுக்கப்படும் காலஅளவு 1.25 மணி நேரங்கள். தேர்வு நேரம் காலை 9.30 முதல் 10.45 வரை.
இரண்டாம் தாள்
மொத்தம் 50 Objective type கேள்விகள் கேட்கப்பட்டு, அனைத்திற்குமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வீதம்(50x2) மொத்தம் 100 மதிப்பெண்கள். இதன் காலஅளவும் 1.25 மணிநேரங்கள். தேர்வு நேரம் காலை 10.45 முதல் நண்பகல் 12 மணி வரை.
மூன்றாம் தாள்
மொத்தம் 75 Objective type கேள்விகள் கேட்கப்பட்டு, அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள் வீதம்(75x2) மொத்தம் 150 மதிப்பெண்கள். தேர்வின் காலஅளவு மொத்தம் 2.5 மணி நேரங்கள். தேர்வு நேரம் மதியம் 1.30 முதல் மாலை 4 மணிவரை.
எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்
முதல் தாள்
பொதுப்பிரிவு மாணவர்கள் 40% மதிப்பெண்களும், OBC மாணவர்கள் 35% மதிப்பெண்களும், SC/ST/PH/VH மாணவர்கள் 35% மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.
இரண்டாம் தாள்
பொதுப்பிரிவு மாணவர்கள் 40% மதிப்பெண்களும், OBC மாணவர்கள் 35% மதிப்பெண்களும், SC/ST/PH/VH மாணவர்கள் 35% மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.
மூன்றாம் தாள்
பொதுப்பிரிவு மாணவர்கள் 50%(75) மதிப்பெண்களும், OBC மாணவர்கள் 45%(67.5) மதிப்பெண்களும், SC/ST/PH/VH மாணவர்கள் 40%(60) மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு தாளிலும், தனித்தனியாக தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதை வைத்தே, இறுதி தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படும். Junior Research Fellowship மற்றும் Lectureship ஆகிய பணிகளுக்கு, தனித்தனியாக மாணவர்களை, இறுதி முடிவுகளை வெளியிடும் முன்பாக UGC தேர்வுசெய்யும்.
பொது விதிகள்
மூன்று தாள்களின் பாடத்திட்டமும் மாற்றப்படவில்லை.
தேர்வு முடிந்தப்பிறகு, Carbon printout of OMR Response sheet -ஐ மாணவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
Negative மதிப்பெண்கள் கிடையாது.
No comments:
Post a Comment