இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் சந்திக்க மாநில அளவில் அனைத்து இந்து இயக்கங்கள், சமுதாய இயக்கங்களை ஒன்றிணைத்து ஓட்டு வங்கி உருவாக்கப்படும். இந்த ஓட்டு வங்கி பாரதீய ஜனதா தலைமையில் ஏற்படுத்தப்படும். நரேந்திரமோடி பிரதமராக வர, வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடம் கிடைக்க வேண்டும். அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களின் ஓட்டு வங்கி ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. தெளிவாக கூறி விட்டது. எனவே விஜயகாந்த், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் பாரதீய ஜனதா தலைமையில் மூன்றாவது அணி அமைத்து வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முயற்சிக்க வேண்டும். இந்துக்களின் ஓட்டு வங்கியை அதற்கு பயன்படுத்த வேண்டும்.
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை விரைந்து தொடங்கி அதில் கிடைக்கின்ற மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பொறுப்பாளர் தனிஸ்குமார் மற்றும் பலர் அருகில் இருந்தனர்.

No comments:
Post a Comment