‘16 வயதினிலே’ படத்தில் கிராமத்து மனிதர்களின் யதார்த்தத்தை சொன்ன பாரதிராஜா, அவருடைய் புதிய படைப்பான ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் கிராமத்து மனிதர்களின் காதலையும், நேசத்தையும் நிதர்சனமாக சொல்லியிருக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் பாரதிராஜா சொல்கிறார்:–
‘‘அன்னக்கொடியும் கொடிவீரனும் படம், மதுரை மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் ஆகும். அன்னக்கொடியும், கொடிவீரனும் வாழ்ந்த கிராகத்துக்கு நேரடியாக சென்று அவர்களையும், அவர்களின் உறவினர்களையும் சந்தித்து, கதையை எழுதினோம்.
இந்த படத்தில் ராதா மகள் கார்த்திகா அன்னக்கொடியாகவே வாழ்ந்திருக்கிறார். பத்மினி, பானுமதி, சாவித்ரி, ராதிகா, ராதா, ரேவரி ஆகியோர் வரிசையில் கார்த்திகாவின் நடிப்பு அமைந்துள்ளது.
சினிமாவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத லட்சுமணன் என்ற இளைஞனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். என் மகன் மனோஜ் கே.பாரதி, சடையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். டைரக்டர் மனோஜ்குமார், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
கோடம்பாக்கத்தை அறிந்திராத, சினிமா வாசனையே இல்லாத மதுரை மண்ணின் மக்கள் அனைவரும் இந்த படத்தில் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள்.
இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் என்னுடன் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது. பின்னணி இசை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக இரவு–பகலாக அவர் பணிபுரிந்தார்.
கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன், அறிவுமதி, ஏகாதசி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு, இந்த படத்தில் இன்னொரு மைல் கல்லாக இருக்கும்.
கதைக்களம் மதுரை மாவட்டத்தின் பின்னணியில் நடைபெறுவதால், பல நாட்கள் அலைந்து திரிந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கரட்டுப்பட்டி என்ற கிராமத்தை கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். தொன்மை மாறாத–பழமை மாறாத பழக்கவழக்கங்கள் கொண்ட புண்ணிய பூமி அது. ஊர் மக்கள் ஒன்று கூடி விவாதித்து, படப்பிடிப்பு நடத்த அனுமதித்தார்கள்.
படப்பிடிப்பின் இறுதிநாளில், அவர்களின் குல வழக்கப்படி கடா வெட்டி கொண்டாடினார்கள்.’’

No comments:
Post a Comment