Monday, February 25, 2013

‘பரதேசி’ ரத்தமும் சதையுமாய் பாடல் எழுதி பாலாவை அழவைத்த கவிஞர் வைரமுத்து

நல்ல கதை அமைந்தால், நல்ல பாட்டு அமையும் என்பதற்கு பாலாவின் ‘பரதேசி’ ஒரு உதாரணம். தேயிலைக் காடுகளில் பஞ்ச காலத்தில், கொத்தடிமைகள் பட்ட துயரம்தான் பரதேசியின் கதை.




படத்தை முடித்துவிட்டு, கவிஞர் வைரமுத்துவுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார், பாலா. படம் பார்த்து இதயம் கனத்துப்போன வைரமுத்து, ரத்தமும் சதையுமாய் பாட்டு எழுதிக் கொடுத்தாராம்.



‘‘செந்நீர்தானா செந்நீர்தானா’’ என்ற பாடலில்



ஆண்டைக்கு ஒரு பாதி ஆவிபோச்சே



அட்டைக்கு சரிபாதி ரத்தம் போச்சே



எங்க மேலு காலு வெறும் தோலாப்போச்சே



அது கங்காணி செருப்புக்குத் தோதாப்போச்சே



என்று உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார்.



‘‘யாத்தே காலக்கூத்தே’’ என்ற பாடலில்



ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை



தன் அடிமை செய்வதுமில்லை



ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்



அது மனிதன் செய்யும் வேலை



என்று ஒரு சரித்திர வரியை எழுதியிருக்கிறார்.



‘‘அவத்தப் பையா சவத்தப் பையா’’ என்ற பாடலில்



செரட்டையில் பேஞ்ச



சிறுமழை போல



நெஞ்சுக் கூட்டில் நெறஞ்சிருக்க



என்று இலக்கியத்தில் சொல்லாத உவமையைச் சொல்லியிருக்கிறார்.



‘‘ஓ செங்காடே சிறுகரடே’’ என்ற பாடலில்



உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே



வயிறோடு வாழ்வதுதானே பெருந்துன்பமே



என்று ஏழைகள் துயரத்தை எழுதியிருக்கிறார்.



கவிஞர் வைரமுத்து பாட்டு வரிகளைப் படித்ததும், எதற்கும் அழாத நான் அழுதுவிட்டேன் என்றாராம், பாலா.



‘பரதேசி’ படத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்து இருக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.



No comments: