விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளதையொட்டி மதுரை நகரில் கமலஹாசனை வாழ்த்தி வித்தியாசமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.
நடிகர் கமலஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் பல தடைகளை கடந்து வருகிற 7-ந்தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர்.
விஸ்வரூபம் வெளிவருவதையொட்டி மதுரை நகரில் பல இடங்களில் கமலஹாசனை வாழ்த்தி மிகப்பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வித்தியாசமான வாசகங்கள் உள்ள இந்த சுவரொட்டிகளை பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கிறார்கள்.
சுவரொட்டியில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்கள் வருமாறு:-
சுவரொட்டியில் சிவன் படத்தை அச்சிட்டு அதன் எதிரே ஆண்டவனும் உன்னை கண்டு வியக்கிறார்கள். ஜெயலலிதா-கருணாநிதி படத்தை அச்சிட்டு அதன் எதிரே ஆண்டவர்களும் உன்னை கண்டு வியக்கிறார்கள்.
அதனை தொடர்ந்து உலக மக்களையே உன் பெயரை உச்சரிக்க வைத்தாய். இந்த வித்தைக்கு பெயர்தான் விஸ்வரூபம். காணாதவர்களையும் காண வைப்பாய் ஹாலிவுட்டில்... வித்தியாசங்களை விஷயங்களாக விளக்கி வரும் விஸ்வரூபமே வருக! வருக!
இவ்வாறு அந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அதனை தொடர்ந்து தெண்டுல்கர், டோனி, விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரின் படங்களை அச்சிட்டு ஆடுபவர்களும் உன்னை கண்டு வியக்கிறார்கள். ஜாக்கிசான், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால் ஆகியோரின் படத்தின் எதிரே உலக நடிகர்களும் உன்னை கண்டு வியக்கிறார்கள் என்ற வாசகங்கள் உள்ளன.
அதனை தொடர்ந்து உலக மக்களையே உன் பெயரை உச்சரிக்க வைத்தாய். இந்த வித்தைக்கு பெயர்தான் விஸ்வரூபம். காணாதவர்களையும் காண வைப்பாய் ஹாலிவுட்டில்... வித்தியாசங்களை விஷயங்களாக விளக்கி வரும் விஸ்வரூபமே வருக! வருக!
இவ்வாறு அந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment