Saturday, February 23, 2013

தமிழின அழிப்பு நிரூபணம்: பிரபாகரன் மகன் கொலை பற்றி சர்வதேச விசாரணை- சீமான் வற்புறுத்தல்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-




தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற உண்மை இன்று உலகின் மனசாட்சியின் முன் பட்டவர்த்தனமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு கொடூரமான இனவெறியைத்தான் அன்று இசைப் பிரியா மீது சிங்கள இனவெறி ராணுவம் காட்டியது.



அதே கோர, சிங்கள இனவெறிதான் பாலசந்திரன் படுகொலையிலும் வெளிப்பட்டுள்ளது. இதற்கு மேலும் இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும், தலைமைகளும் அங்கு நடந்தது போர்க் குற்றம் அல்ல, அந்த போரே குற்றம் என்பதையும், பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கை அரசு மேற்கொண்டு திட்ட மிட்ட தமிழின அழிப்பே என்பதையும் தெளிவாக புரிந்துகொண்டு, சுதந்திர மான பன்னாட்டு விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.



இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை அனைத்துக் கட்சிகளும் வற்புறுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஒற்றை குரலில் நாடாளுமன்றத்தில் இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: