நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பூலித்தேவனின் 298–வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை பூலித்தேவனின் வாரிசான கோமதிமுத்துராணி, பால்குடம் எடுத்து வந்து பூலித்தேவன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தார்.
பின்னர் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகாசி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் திரண்டு வந்து விழாவில் பங்கேற்றனர்.
தற்போது நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் நெற்கட்டும்செவலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டன. இதற்காக 15 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதரி தலைமையில் ஏ.டி.எஸ்.பி.மகேந்திரன், 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment