தூத்துக்குடியில் நடத்தப்பட்ட கனிம மணல் ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனிம மணல் ஆய்வறிக்கை குறித்து பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு தாக்கல் செய்யும் பதில் மனுவை பொறுத்து அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தூத்துக்குடியில் உள்ள கனிம தாது மணல் சுரங்கங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இந்த நிலையில் இது குறித்து வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தயாதேவதாஸ் மற்றும் சுந்தரம் என்பவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், அணையம் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து வாதாடிய அரசு வழக்குரைஞர் சோமையாஜி, கனிம மணல் வழக்கில் ஆய்வறிக்கை தமிழக அரசுக்குக் கிடைத்து விட்டது. ஆனால், அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. இது தமிழக அரசுத்துள்ள முடிவு என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ஆய்வறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாமே என்று கூறினர். அரசு ஆய்வறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்றமே தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரிக்கும் என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்த சோமையாஜி, தமிழக அரசு ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதற்கு பதிலாக பதில் மனுவை தாக்கல் செய்யும் என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அரசு தரப்பு வழக்குரைஞருக்கு எதிர்ப்பு இதனிடையே, இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக சோமையாஜி ஆஜராவதற்கு மனுதாரர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தாது மணல் சுரங்க கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணை நடத்தப்பட்டு வரும் விவி.மினரல்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்குகளில் ஆஜராகும் சோமையாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
NOTE : V.V.MINERALS (nadar) IS HOLDING SHARE IN JAYA T.V.
No comments:
Post a Comment