காமராஜரைப் பற்றி விமர்சித்து பேசியதாக நடிகர் கருணாஸ் மீது எழுந்துள்ளது. இந்தப் புகாரை மறுத்துள்ள அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேவர் ஜெயந்தி பொதுக்கூட்டம் கோவை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. இப்பொதுகூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி நான் தவறாக பேசியதாக ஒரு வார இதழில் செய்தி வெளியாகியிருப்பதாக எனது நலம் விரும்பிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை வழிகாட்டியாக வணங்கி அவர் வழியில் வாழ்ந்து வருகிறவன் இந்த கருணாஸ். நான் பேசியதை உண்மைக்கு மாறாக திரித்து எழுதி கட்டுரை வெளியிட்டிருக்கும் சம்மந்தப்பட்ட வார பத்திரிகை மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க எனது வழக்கறிஞர்கள் பணியை தொடங்கியிருக்கிறார்கள்.
பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் பேசியிருப்பதாக பிரசரிக்கப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம். தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், ஜாதி வேறுபாடுகளை களைந்து சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காக களப்பணியாற்றி வரும் என்னை குறுகிய கண்ணோட்டத்துடன் ஜாதி முத்திரை குத்தவேண்டாம் என்பதை பணிவுடன் கேடுக்கொள்கிறேன். என இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாஸ் கூறியுள்ளார்
No comments:
Post a Comment